Best Of IlayaThalapathy Vijay-Part 1

செவ்வாய், 22 டிசம்பர், 2009

வேட்டைக்காரன் மெகா ஹிட் விஜய் சந்தோசம்


சன் பிக்ஸர்ஸ் சார்பில் வெளியான வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய, வர்ணிக்க முடியாத அளவு, மெகா வெற்றிப் படமாக அமைந்துள்ளதாகவும், இப்படி ஒரு வெற்றிப் படம் தந்ததற்காக ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி என்று விஜய் கூறினார். வேட்டைக்காரன் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இது பெரும் வெற்றிப் படம் என்று தயாரிப்பாளர், வெளியீட்டாளரான சன் பிக்ஸர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், இன்று சன் பிக்ஸர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் வீட்டுக்கு நடிகர் விஜய்யும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரனும் விசிட் அடித்தனர். கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து கொடுத்து, இப்படியொரு பிரமாண்ட வெற்றிப் படம் அமையக் காரணமாக இருந்ததற்கு நன்றி என்று கூறினார் விஜய். பின்னர் அளித்த பேட்டியில், வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். இனி அவர் தனது படிப்பை கவனிக்க வேண்டும். நடிப்பு அப்புறம்தான். இந்த சந்தோஷமான நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் மீண்டும்

திங்கள், 21 டிசம்பர், 2009

விஜய்யின் புதிய கண்டிஷன்


இனிமே விஜய் படத்தை சன் பிக்சர்ஸ் மட்டுமில்ல, எந்த ஒரு தனிப்பட்ட பெரிய விநியோக கம்பெனியிடமும் தயாரிப்பாளர் விற்க முடியாது. காரணம், வேட்டைக்காரன் ஏற்படுத்திய கசப்பான அனுபவம் தானாம்.

ஏ.வி.எம். தயாரிப்பில் விஜய் நடித்த ‘வேட்டைக்காரனை’ சன்பிக்சர்ஸிடம் விற்றுவிட்டு அப்பாடா என்று ஏவிஎம் ஒதுங்கிக் கொள்ள, படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் அதில் கொஞ்சம் எடிட்டிங் செய்துவிட்டதாக விஜய்க்கு காதுவழி செய்திகள் போயிருக்கின்றன.

இதனால் கோபமான விஜய், படத்தை பார்க்க வேண்டும் என்று அவரது அப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.. உடனே அவரும் எ.வி.எம்..மிற்கு போன் செய்ய அவர்களோ, ரைட்ஸ் எல்லாமே சன் பிக்சர்ஸிடம் தான் இருக்கிறது நான் என்ன செய்வது... இருந்தாலும் கேட்டுச் சொல்கிறேன்... என்று சொல்லிவிட்டு சன்பிக்சர்சுக்கு போனைப் போட, அவர்களோ இப்போதைக்கு முடியாது என்று மறுத்திருக்கிறார்கள். இதை தயங்கித் தயங்கியே எஸ்.ஏ. சந்திரசேகரிடம் சொல்லியிருக்கிறது ஏ.வி.எம். தரப்பு. இதைக் கேட்டு கோபமுற்ற அவர், ‘என்ன இது அநியாயமா இருக்கு... படத்தில நடிச்ச ஹீரோவுக்கே போட்டு காட்ட மாட்டேங்குறாங்க... படம் ரிலீசாகிறப்ப தான் பார்க்கணுமா...?’ என்று கோபப்பட எப்படியோ ஒரு வழியாக தயாரிப்புத் தரப்பு அவரை சமாதானப்படுத்தியிருக்கிறது.

இந்த அனுபவத்தினால் இனிமேல் படம் ஒப்பந்தம் போடும் போதே நேரடியாக விநியோகஸ்தருக்கே படத்தை விற்க வேண்டும் என்று ஒரு கண்டிஷனையும் போடப்போகிறாராம் விஜய்.

சனி, 28 நவம்பர், 2009

சண்டைக்காரரை மாற்றிய விஜய்

விஜய் படத்தில் மாறாத விஷயங்கள் என்று சில உண்டு. அதில் முக்கியமானது சண்டைப் பயிற்சியாளர் பெப்சி விஜயன். விஜய்யின் பெரும்பாலான படங்களுக்கு பெப்சி விஜயன்தான் சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறார். ஆனால், வேட்டைக்காரனிலிருந்து இந்த காம்பினேஷன் மாறுகிறது. விஜயனின் இடத்தை கனல் கண்ணன் பிடித்திருக்கிறார்.வேட்டைக்காரனில் கனல் கண்ணன் அமைத்த சண்டைக் காட்சிகள் திருப்திகரமாக இருந்ததால் சுறா படத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் விஜய், வில்லன் தேவ் கில்லுடன் மோதும் காட்சியை கனல் கண்ணன் அமைத்திருந்தார். தொடர்ந்து இனி விஜய் படங்களுக்கு கனல் கண்ணனே ஸ்டண்ட் மாஸ்டராக பணிபு‌ரிவார் என்கிறார்கள்.ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்ப‌ரில் மீண்டும் கேரளாவுக்கு செல்கிறது சுறா யூனிட்.

விஜய் பிறந்தநாளில் சுறா

சுறா விஜய்யின் ஐம்பதாவது படம். சகல விதத்திலும் படம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஹைதராபாத்தில் நடக்கும்; படப்பிடிப்பைத் தொடர்ந்து டிசம்ப‌ரில் கேரளா செல்கிறது மொத்த யூனிட்டும்.எஸ்.பி.ராஜகுமார் படத்தை இயக்குகிறார். ஆ‌க்சன் காட்சிகளுக்கு சமமாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக விஜய், வடிவேலு வரும் காட்சிகள் வயிற்றை பதம்பார்க்கும்.2010 தொடக்கத்திலேயே படம் தயாரானாலும் ஜுன் 22 ஆம் தேதி படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறார் தயா‌ரிப்பாளர் சங்கிலி முருகன். அன்றுதான் விஜய்யின் பிறந்தநாள். விஜய் படம் வெளியாக அதைவிட சிறந்த நாள் இருக்க முடியாது.
விஜய் நடித்து பெரும் வெற்றி பெற்ற கில்லி படத்தை இந்தி யில் ரீமேக் செய்கிறார் பிரபு தேவா. ரீமேக் கிங் என்ற பட்டம் ஜெயம் ராஜாவுக்குப் பிறகு, இன்றைய தேதிக்கு பிரபு தேவாவுக்குதான் சரியாகப் பொருந்தும்.

விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!

தம்பி படத்தை அடுத்து ’கோபம்’ காட்டவிருந்தார் சீமான். ஆனால், சூழ்நிலை அவரை ‘வாழ்த்துகள்’சொல்ல வைத்தது.
இந்த காலகட்டத்தில் சீமான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, ‘’கோபம்’ என்று படம் எடுக்கப்போகிறேன்’ என்று சீமான் சொல்ல,பிரபாகரனுடன் பக்கத்தில் இருந்தவர் ‘சினம்’ என்று தலைப்பு வையுங்கள் என்றாராம். அதற்கு பிரபாகரன், ‘கோபம் என்று சொன்னால்தான் அதில் அழுத்தம் இருக்கிறது. ஒரு வேகம் இருக்கிறது. அந்த தலைப்பிலேயே படம் எடுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள். ஆனால் வாழ்த்துக்கள் மாதிரி மென்மையான படம் எடுக்க வேண்டாம்’என்று சொன்னாராம். அதன்படி சீமான் ‘கோபம்’காட்ட முடிவெடுத்துவிட்டார். நடிகர் விஜய்யும் சீமானுடம் இணைய முடிவெடுத்துவிட்டார். படப்பிடிப்புதான் எப்போது துவங்கப்போகிறது என்று தெரியவில்லை.

ஞாயிறு, 15 நவம்பர், 2009

விஜய், தமன்னா ஆட்டம்

ஹைதராபாத்தில் சுறா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லன், தேவ் கில். மஹாதீரா படத்தில் வில்லனாக நடித்தவர்.
தெலுங்குப் படத்தில் பிஸியாக இருப்பவர் ஷூட்டிங் ஹைதராபாத்தில் என்பதால் கவலையில்லாமல் கலந்து கொள்வார் என்கிறார்கள். ஹைதராபாத் கிளம்பும்முன் சுறாவின் முக்கிய காட்சிகளை ஏவிஎம் ஸ்டுடியோவில் படமாக்கினர். வேறொன்றுமில்லை, விஜய், தமன்னா ஆடிப்பாடிய பாடல் காட்சிதான் அது.. விஜய் முருகன் உருவாக்கிய காஸ்ட்லி அரங்கில் இந்த ஆட்டம் பாட்டம் படமாக்கப்பட்டது. விஜய் தமன்னாவுடன் ஆடிப் பாடியது இதுதான் முதல்முறை.

வெள்ளி, 6 நவம்பர், 2009



இவ் இணையத்தில்,
பிறந்த நாள் வாழ்த்துக்கள் முற்றிலும் இலவசம்!உங்கள் வாழ்த்துகளை ஒரு வாரத்திற்கு முன் அனுப்பிவையுங்கள்!

உங்கள் கவிதைகள்,கருத்துக்கள் மற்றும் உங்கள் திறன்களை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அணிபிவையுங்கள்!

நன்றி

வேட்டைக்காரன் டிசம்பர் எதிர்பாக்கலாம்!


விஜயின் புதிய பாடமான வேட்டைக்காரன் டிசம்பர் பதினெட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.அனுஷ்கா ஷெட்டி விஜயுடன் முதல் முதலாக ஜோடி சேரும் படம் இது.
விஜயின் ரசிகர்களுக்கு இடையே பலத்த எதிர்பார்ப்பை எட்படிதிருக்கும் இப் படமானது டிசம்பர் அதிரடியாக வரப்போகிறது.இது விஜயின் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படித்தியுள்ளது.வேட்டைக்காரன் ற்றைலேரை வெகு விரைவில் சன் வெளியிட உள்ளது.

வியாழன், 5 நவம்பர், 2009

சட்ட ‌ரிதியாக சந்திப்பேன் - விஜய்


வீட்டு வசதி வா‌ரியத்திடமிருந்து விஜய் வாங்கிய நிலம் தொடர்பாக விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபற்றி விஜய் சார்பாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார். உதயம் திரையரங்குக்கு எதிரே உள்ள நிலத்தை வீட்டு வசதி வா‌ரியம் ஏலம் விட்டது. அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கி விஜய் ஜோசப் என்ற எனது சொந்த பெய‌ரில் ‌ப‌திவு செய்தேன். ஆனால், அதற்கு அருகில் இருக்கும் திருமண மண்டபத்தையும் நான் வாங்கிவிட்டதாக சிலர் புரளி கிளப்புகிறார்கள்.

நான் வாங்கிய இடத்தில் பறக்கும் ரயில் திட்டம் வர இருப்பதால் அதற்குப் பதிலாக வேறு இடத்தை வீட்டு வசதி வா‌ரியம் அளித்தது. அதில்தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதனை நான் சட்ட‌‌‌ப்படி எதிர்கொள்வேன்.

இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

விஜய்க்கு தேசிய அளவில் புகழ் அதிக‌ரித்து வருகிறது. அதை பொறுக்க முடியாத சிலர் கிளப்பிவிடும் வீண் வதந்திகள் இவை என்று தெ‌ரிவித்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

புதன், 4 நவம்பர், 2009

ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு விஜய்யின் அடுத்த படம்... இயக்குநர் ராஜா!


தனது சினிமா வாழ்க்கைக்கே புதிய திருப்பத்தைத் தந்த காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அடுத்த படத்தில் நடிக்கிறார் விஜய். (இந்தப் படத்தை சங்கிலிமுருகன் தயாரிக்க ஆரம்பிக்க, பின்னர் அதை அவரிடமிருந்து வாங்கி ஆஸ்கர் தான் தயாரித்தார்)

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் அடுத்தடுத்து தொடர் வெற்றிகளைத் தந்த ஜெயம் ராஜா.

தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து தொடர்ந்து 5 படங்கள் இயக்கிய ராஜா, வெளி ஹீரோ ஒருவரை வைத்து படம் இயக்குவது இதுவே முதல் முறை.

காதலுக்கு மரியாதை படம் தந்த கமர்ஷியல் வெற்றியை இந்தப் படமும் நிச்சயம் தரும் என்பதற்கு இந்த கூட்டணியே சான்று என்கிறார் இயக்குநர் ராஜா.

விஜய்யின் 51வது படம் இது. 2011 தீபாவளி வெளியீடாக இந்தப் படம் வெளியாகும் என ஆஸ்கர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில்...

செவ்வாய், 3 நவம்பர், 2009

ஹைதராபாத்தில் சுறா


மரக்காணம் உப்பு ஏ‌ரிக்கு அருகில் இரண்டாவது ஷெட்யூலை முடித்த சுறா யூனிட் அடுத்து ஹைதராபாத் செல்கிறது.

விஜய்யின் 50வது படமான சுறாவை எஸ்.பி.ரா‌ஜ்குமார் இயக்கி வருகிறார். தமன்னா ஹீரோயின். கேரளாவில் தொடங்கிய படப்பிடிப்பு பிறகு மரக்காணத்தில் தொடர்ந்தது. அங்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதையடுத்து வரும் 5ஆ‌ம் தேதி சுறா யூனிட் ஹைதராபாத் செல்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படும் என தெ‌ரிகிறது.

புதன், 28 அக்டோபர், 2009

விளம்பர படங்களில் நடிக்க விஜய் விருப்பம்!


சென்னை: ஒரு கதையை ஒரே நிமிடத்தில் அழகாக சொல்லும் விளம்பரப் படங்கள் பிரமிக்க வைக்கின்றன. அந்தப் படங்களில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார் நடிகர் விஜய்.

கோகோ கோலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் நடிகர் விஜய்யை சந்திக்க வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மாமல்லபுரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், வெற்றியாளர்களுக்கு விஜய் பரிசு வழங்கினார். அத்துடன் இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 30 பேரின் குடும்பத்தினருடன் விஜய் ஜாலியாக கலந்துரையாடினார்.

தொடர்ந்து நடிகர் விஜய் பேசுகையில், "கோகோகோலா நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அதிகமாக ஆச்சரியப்பட்ட விஷயம் என்னவென்றால், ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரம் ஓடும். அதில் ஒரு கதையை சுவாரஸ்யமாக சொல்வார்கள்.

ஆனால் ஒரு பொருளின் புரமோஷனுக்கான விளம்பரம் என்பது ஒரு நிமிடம் மற்றும் 30 வினாடி மட்டுமே ஓடக் கூடியது. இதிலும் ஒரு கதை சொல்வார்கள்.

இவ்வாறு ஒரு நிமிடத்தில் சொல்லப்படும் கதைதான் எனக்கு பிரமிப்பை அளிக்கிறது. அப்போதே என் மனதில் இது போன்ற விளம்பர படங்களில் குறிப்பாக கோக் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். என்னுடைய ஆசை நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
விஜய்யின் 50வது படமான சுறா, மலையாளத்தில் மோகன்லால் நடித்த, "சோட்டா மும்பை' படக்கதையின் தழுவல் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது. ஆனால், படத்தின் இயக்குனரான எஸ்.பி.ராஜ்குமார், இதை மறுக்கிறார். "சுறா கதை, விஜய்க்கென்றே உருவாக்கப்பட்ட புதிய வடிவம்; அதனால், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்,..' என்கிறார்.

வியாழன், 22 அக்டோபர், 2009

மரக்காணத்தில் சுறா


விஜய் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமான தீபாவளி. அவர்கள் எதிர்பார்த்த வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகவில்லை. அதே நேரம் அவர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்றும் இருக்கிறது. அது சுறா.

விஜய்யின் ஐம்பதாவது படமான இதனை எஸ்.பி.ரா‌ஜ்குமார் இயக்கி வருகிறார். தமன்னா ஜோடி. கேரளாவில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. வேட்டைக்காரன் வெளியான மூன்று மாதத்திற்குள் சுறாவை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

தற்போது சுறா யூனிட் மரக்காணத்தில் முகாமிட்டுள்ளது. இங்கு பிரமாண்ட அரங்குகள் அமைத்து ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக் காட்சியை எடுக்க திட்டமிட்டுள்ளனர். எல்லா வகையிலும் சுறா பிரமாதமாக இருக்க வேண்டும் என்பதற்காக பணத்தை வா‌ரி இறைக்கிறார் தயா‌ரிப்பாளர் சங்கிலி முருகன்.

பாடல் காட்சிக்கு வெளிநாடு செல்லும் திட்டமும் இருக்கிறதாம்.

புதன், 21 அக்டோபர், 2009

மீண்டும் காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி?


இதுதான் இப்போது லேட்டஸ்ட் பரபரப்பு. விஜய்க்கு தொலைபேசியிலேயே கதை சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் பாசில். இந்த காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக பலமாகவே கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். விஜய் தனது ஐம்பதாவது படமான சுறாவில் தற்போது பிஸியாக இருக்கிறார். இதையடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த புராஜெக்ட் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த சின்ன கேப்பில் சிக்சர் அடிக்க பலரும் முயற்சி செய்கிறார்கள்.

லிங்குசாமி விஜய்க்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளாராம். விஜய் ஓகே சொன்னால் படப்பிடிப்பை தொடங்க - பையாவுக்கு பிறகுதான் - அவர் தயார். ஏற்கனவே பாடிகாட் படத்தின் கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் சித்தார்த்.

இந்நிலையில் பாசிலும் விஜய்யிடம் கதை கூறியிருக்கிறார். விஜய்யின் சினிமா கே‌ரிய‌ரில் திருப்புமுனையாக அமைந்த படம், பாசிலின் காதலுக்கு ம‌ரியாதை. அதனால் கதையை கேட்ட விஜய் சீ‌ரியஸாக அதுபற்றி யோசனை செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி மீண்டும் இணையுமா? விஜய்தான் பதில் சொல்ல வேண்டும்.

வியாழன், 15 அக்டோபர், 2009

பாசில் இயக்கத்தில்...


"வேட்டைக்காரன்' படத்தை முடித்து விட்ட விஜய், அடுத்து "சுறா' படத்தில் நடிக்கிறார். இதையடுத்து அவரது படங்களை ரமணா, "ஜெயம்' ராஜா, மலையாள இயக்குநர் சித்திக் ஆகியோர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்யுடன் நயன்தாரா ஜோடி சேரும் படத்தை பாசில் இயக்குவார் எனத் தெரிகிறது. ஏற்கனவே "காதலுக்கு மரியாதை', "கண்ணுக்குள் நிலவு' ஆகிய படங்களில் விஜய்யை பாசில் இயக்கிருக்கிறார். ஆனால், இந்த தகவல் விஜய் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது.

விஜய் கட்டப்போகும் பள்ளிக்கூடம்


நடிகர் விஜய் ஓசையுடனும் ஓசை இல்லாமலும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். கட்சி ஆரம்பிக்கப் போகிறார்... அப்படி இப்படி என்று இவரைப் பற்றி அடிக்கடி செய்திகள் கசிந்தவண்ணம் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதை மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறாராம். இப்போது இவர் ஏழைகளும் பயன்பெறும் விதத்தில் சென்னையை அடுத்த வேளச்சேரியில் பள்ளிக்கூடம் ஒன்று கட்டும் எண்ணத்தில் இருக்கிறாராம். இந்தப் பள்ளிக்கூடம் கம்ப்யூட்டர் வசதிகளைக் கொண்டு முன்னணி பள்ளிக்கூடங்களுக்கு இணையானதாக இருக்குமாம். இந்தப் பள்ளிக்கு மக்கள் நல்ல ஆதரவைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் விஜய்.

நல்ல விஷயங்களுக்கு எப்பவுமே நம்ம மக்கள் ஆதரவு தருவார்கள்.

செவ்வாய், 13 அக்டோபர், 2009

வேட்டைக்காரன் எப்ப ரிலிஸ்?


தீபாவளிக்கு வேட்டைக்காரன் வெளியாகவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி ஆகிய மூன்று படங்கள் மட்டுமே தீபாவளி ரேஸில் கலந்து கொள்கின்றன. கடைசி நேரத்தில் சா பூ தி‌ரி, அதே நேரம் அதே இடம் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகவில்லை. ச‌ரி, அப்படியானால் எப்போதுதான் படம் வெளியாகும்? தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே பெ‌ரிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்கள் வெளியிட வேண்டும் என்ற தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதிமுறை இந்த தீபாவளி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த புதிய விதியின்படி பொங்கலுக்குதான் வேட்டைக்காரனை வெளியிட வேண்டும். அவ்வளவு நாள் படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் காத்துக் கொண்டிருக்குமா? அதற்கு முன்னால் அவர்கள் படத்தை வெளியிட துணிந்தால் என்ன செய்வது? இதுதான் இப்போது தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தை ஆட்டிப் படைக்கும் கேள்வி.

புதன், 7 அக்டோபர், 2009

விஜய், தமன்னாவை சூழ்ந்த ரசிகர்கள்


வேட்டைக்காரன் படப்பிடிப்பு வேலைகளை முற்றிலுமாக முடித்து கொடுத்துவிட்ட விஜய் தற்போது 50வது படமான சுறாவுக்காக கேரளாவில் பிசியாகி இருக்கிறார்.

இதில் விஜய்க்கு தமன்னா ஜோடி போட்டுள்ளார். காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சங்கிலி முருகன் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

அழகர் மலை படத்தை இயக்கிய எஸ்பி ராஜ்குமார் விஜய்யின் 50வது படத்தை பிரமாண்டமான வெற்றி படமாக மாற்ற முயற்சித்து வருகிறார். இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவே பெரும் சிரமப்பட்டு உழைத்து வருகிறது.

படப்பிடிப்பு குழுவினர் கடந்த ஒரு வார காலமாக கேரளா, ஆலப்புழையில் ரொமான்ஸ் சீன்களை எடுத்து வருகின்றனர். முதலில் ரொமான்ஸ், மத்ததெல்லாம் அடுத்து என்பதில் இயக்குனர் உறுதியாக இருக்கிறாராம். இதில் பல சீன்கள் நன்றாகவே வந்துள்ளதாம்.

இந்நிலையில் மீனவ இளைஞரான விஜய், தண்ணீரில் தத்தளிக்கும் தமன்னாவை காப்பாற்றுவது போன்ற காட்சிகள் கடற்கரை பகுதிகளில் எடுக்கப்பட்டதாம்.

அப்போது விஜய், தமன்னா வந்திருப்பதை தெரிந்து கொண்ட கேரள ரசிகர்கள் சுமார் ஆயிரம் பேர் மொத்தமாக வந்து ஷூட்டிங் ஸ்பாட்டையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டனராம்.

விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய அவர்கள் அவருடன் போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என அடம் பிடித்துள்ளனர். அப்போது ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல மணி நேரம் ஷூட்டிங் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படக்குழுவினர் வேறு வழி தெரியாமல் போலீஸாரை கூப்பிட்டு, கூட்டத்தை அப்புறப்படுத்தினார்களாம்.

விஜய்யின் புதிய வில்லன்


வில்லன் பவர்ஃபுல்லாக இருந்தால் மட்டுமே ஹீரோயிசம் தூக்கலாக‌த் தெ‌ரியும். எம்.‌ஜி.ஆ‌ரின் ஹீரோ இமேஜுக்கு மறைமுக காரணம் நம்பியா‌ரின் வில்லத்தனம் என்றால் மறுக்க முடியுமா? ஒரு படத்தின் வில்லனை முடிவு செய்தாலே பாதி வேலை முடிந்த மாதி‌ரி.

அந்தவகையில் சுறாவில் விஜய்யின் வில்லன் யார் என்பதை முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ரா‌ஜ்குமார்.

சமீபத்தில் ஆந்திராவை கலக்கிய படம், ராம் சரண் தேஜா நடித்த மஹாதீரா. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர், தேவ் கில். இவரை சுறாவில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இவரே சுறாவில் மெயின் வில்லன், விஜய்யுடன் மோதப் போகிறவர்.

கேரளாவின் ஆலப்புழையில் முதல் ஷெட்யூலை முடித்தவர்கள் இரண்டாவது ஷெட்யூலுக்காக சென்னை வந்துள்ளனர். பின்னி மில்லில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெறலாம் என்பது யூனிட்டிலிருந்து கசிந்திருக்கும் செய்தி.

வியாழன், 1 அக்டோபர், 2009

விஜய்யின் முதுகில் தமன்னா... அலுக்காத ரீடேக்!


கொச்சினில் நடந்து வருகிறது சுறா படப்பிடிப்பு. ஆனாலும் கமல்ஹாசனுக்கு விஜய் டிவி நடத்துகிற பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அங்கிருந்து பறந்து வந்தார் விஜய்.
நடிப்பில் ரஜினி வழியை பின்பற்றும் விஜய், அடிப்படையில் கமல் மேல் மிகவும் பற்று கொண்டவர். அதனால்தான் இவ்வளவு கடுமையான வேலைகளுக்கு இடையேயும் கொச்சினிலிருந்து சென்னைக்கு பறந்து வந்துவிட்டார்.

சரி, கொச்சின் எபிசோட் சொல்லும் குளுகுளு மேட்டர் என்ன?

இந்த படத்தை துவங்கும் முன்பாகவே தமன்னாவை தங்க பஸ்பம் போல காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்களாம். அதற்கு பொறுத்தமாகதான் காஸ்ட்யூம்களும் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. அடிக்கிற மழையிலே ஐஸ்கிரீமை விழுங்கிய மாதிரி, தமன்னாவை தண்ணியிலே போட்டு முங்கவும் முடிவெடுத்திருந்தாங்களாம். எல்லாவற்றுக்கும் சம்மதித்த தமன்னா, நாள் முழுவதும் கொச்சின் கடலில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

ஒரு காட்சியில் விஜய் தோளில் பாய்ந்து ஏறிக் கொள்வது போல நடிக்க வேண்டும். சுமார் பத்து முறையாவது அவர் விஜய் மீது பாய்ந்ததாக குறிப்பிடுகிறார்கள் யூனிட்டில். பெரிய ஹீரோக்களை பொறுத்தவரை ரீடேக் என்றால் லேசாக எரிச்சல் படவும் செய்வார்கள். ஆனால், இந்த முறை விஜயும் பொறுமையாக இருந்தாராம்.

பஞ்ச் டயலாக்கை ரசிக்கிற மனுஷருக்கு, பஞ்சு மூட்டைய சுமக்கறதுக்கு கசக்குமா என்ன?

vettaikaran

ஐம்பதாவது படமான சுறாவில் பிஸியாகிவிட்டார் விஜய். விஜய்யும், தமன்னாவும் இடம்பெறும் காட்சிகளை கேரளாவின் ஆலப்புழாவில் படமாக்கி வருகிறார் இயக்குனர் எஸ்.பி.ரா‌ஜ்குமார்.

தீபாவளிக்கு அவரது வேட்டைக்காரன் வெளியாகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

விஜய், அனுஷ்கா இடம்பெறும் பாடல் காட்சி மற்றும் சில டாக்கி போர்ஷன் இன்னும் படமாக்கப்பட உள்ளதாம். இதில் பாடல் காட்சியை ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். அனுஷ்கா சூர்யாவின் சிங்கம் படத்தில் பிஸியாக இருப்பதால் வேட்டைக்காரன் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது.

இந்த சிக்கல் காரணமாக படம் தீபாவளிக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வேட்டைக்காரனை வாங்கியிருக்கும் சன் பிக்சர்ஸ் ஏற்கனவே கண்டேன் காதலை படத்தின் உ‌ரிமையையும் வாங்கியுள்ளது. தவிர தனுஷின் குட்டி படத்தை வாங்கவும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த காரணங்களால் வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளிவருமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

திங்கள், 28 செப்டம்பர், 2009

இயக்குநருக்கு விஜய் அன்புக்கட்டளை


‘வேட்டைக்காரன்‘ படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்க்ஷன் வேலைகள் ஆரம்பித்துவிட்டதால் விஜய் தனது அடுத்த படமான ‘சுரா’ படத்திற்கான முயற்சிகளில் இறங்குகவதற்குத் தயாராகி வருகிறார்.
இது இவரது 50 வது படம். விஜய்யை வைத்து ‘காதலுக்கு மரியாதை’ படத்தை எடுத்த சங்கிலி முருகன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ‘காதலுக்கு மரியாதை’ விஜய் படங்களில் முதன் முதலில் மிகப்பெரிய ஹிட் அடைந்த படம் என்பதால் இந்தப் படமும் வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் விஜய்.
இந்தப் படத்தை இயக்குகிறார் எஸ்.பி. ராஜ்குமார். இவர் சென்டிமென்டான படங்களை எடுத்துக் கொண்டிருந்தவர். முதன்முறையாக விஜய்யுடன் இணைகிறார். விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ‘ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்களுக்கு இந்தப் படத்தைப் பற்றி ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும்... அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிற மாதிரியாக படம் இருக்கவேண்டும்’ என்று இயக்குநருக்கு அன்புக் கட்டளையிட்டிருக்கிறார் விஜய்.

ரஜினி வழியை விஜய் பின்பற்ற வேண்டும்! -சக்ஸேனா


ரஜினி வழியைப் பின்பற்றினால் விஜய்யும் உச்சநிலைக்கு வரமுடியும் என்றார் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய பெரிய படங்களை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு முதல் எங்கள் அணுகுமுறை, படங்களைத் தேர்வு செய்யும் விதம் என எல்லாமே மாறப்போகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ படம்தான் சன் பிக்சர்ஸின் நேரடி முதல் தயாரிப்பு. எந்திரன் படத்தை கலாநிதி மாறன் மிகுந்த நம்பிக்கையுடன் தயாரிக்கிறார். அதற்கு ஏற்ப ஷங்கரும் அவரது குழுவினரும் தங்கள் படம் போல் உழைக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படம் வெளிவரும்.

இந்தப் படத்துக்கு இயக்குனர் ஷங்கர் கடினமாக உழைத்து வருகிறார். அதை பார்க்கும்போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது.

ரஜினியின் உழைப்பு ஒரு பிரமிப்பு. இன்னும் பல காலத்துக்கு அதைப் பற்றி இந்த திரையுலகம் பிரமிப்புடன் சொல்லிக் கொண்டுதான் இருக்கும். ரஜினி சாரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய நடிகர்கள், இளைஞர்களை அனைவருமே அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.

ரஜினியின் வழியை விஜய் பயன்படுத்திக்கொண்டால் உச்சத்துக்கு வர முடியும்…, என்றார் சக்ஸேனா.]

இந்த மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர், எந்திரன் படம் 85 சதவிகிதத்துக்கும் மேல் முடிந்துவிட்டதாகவும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “எப்போது விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறீர்கள் என்று வெளியூர் சென்றாலும் ரசிகர்கள் கேட்கிறார்கள். ‘முதல்வன்’ படத்தில் முதலில் நடிக்க வைக்க எண்ணியது ரஜினியை. அவர் கிடைக்காவிட்டால் விஜய்யை வைத்து இயக்க நினைத்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.

விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கிறது. நான் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 7 வருடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். விரைவில் விஜய்யை வைத்து படம் செய்யும் திட்டம் உள்ளது. என் குருநாதர் மகன் அவர் என்பதால் மட்டுமல்ல… அவர் திறமையான நடிகர்… அவர் ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது…,” என்றார்.

பின்னர் பேசிய விஜய், அடுத்த வரவிருக்கும் தன்னுடைய ஒரு படத்திலிருந்து பாடல் வரிகளைப் பாடிக் காட்டினார்.

“நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் தூங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே…”

-இப்படிப் போகின்றன அந்தப் பாடல் வரிகள்…!!

எங்களுடைய தள தள தளபதி வேறொருவரின் வழியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை!
அவரொரு சுபெர்ச்டார் என்றால் இவரும் ஒரு சுபெர்ச்டார் தான்.

சனி, 26 செப்டம்பர், 2009

விஜய், விக்ரம், சூர்யா, விஷால் நாலு பேரும் ஓரிடத்தில் கூடினால் நவகிரகத்தை பார்த்த ஃபீலிங் இருக்கும். அந்தளவுக்கு உள்ளுக்குள் கர்...புர்... ஆகிற கோஷ்டி இது.

ஆனால் இந்த பகையை மறந்து பரவச நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் ஒரு விஷயத்தில்! லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடும் ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி. அதில்தான் இந்த சூப்பர் ஹீரோக்கள் கலந்து கொண்டு பாடி நடிக்கப் போகிறார்களாம். ஆஹா... ஒன்ணு கூடிட்டாங்களே என்று ரசிகர்கள் சந்தோஷப்பட வேண்டாம். இவர்களை அணுகும் போதே “எல்லாரும் ஒரே பிரேமில் வர்றது கஷ்டம்” என்று கூறிவிட்டார்களாம் தெளிவாக.
“அவரு வராத நாளா சொல்லுங்க. நான் வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிடுறேன்” என்று கிளிப்பிள்ளை மாதிரி ஒரே வார்த்தையை ஒப்பித்தார்களாம் நால்வரும். “பிஸியாக இருப்பதால் நாங்கள் சொல்லுகிற தேதியில் படப்பிடிப்பை வைத்தால் சவுரியமாக இருக்கும்” என்று அடிஷனல் வேண்டுகோளும் வைத்தார்களாம்.
எல்லாவற்றும் தலையசைத்து சம்மதித்திருக்கிறது இந்த ஆல்பத்தை எடுக்க முடிவு செய்த டீம். இதே கல்லூரியில் படித்த இயக்குனர்களும் இதில் நடிப்பார்கள் என்பது கூடுதல் பீட்ஸா!

வியாழன், 24 செப்டம்பர், 2009

வேட்டைக்காரன்




வேட்டைக்காரன்

இதுவரை இணையத்தில் வெளியானதாகச் சொல்லப்பட்ட பாடல்கள் மற்றும் வீடியோ எதுவுமே உண்மையானவை இல்லையாம். இவை இணையத்தில் வந்ததால் அவற்றுக்குப் பதில் புதிதாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள் வேட்டைக்காரன் யூனிட்டில்.

இளங்கோவன் கூறினார்.


நடிகர்கள் விஜய் மற்றும் ரஜினிகாந்த் விருப்பமிருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு வரலாம். அவர்களை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லையென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ராகுல்காந்தி சென்னை வந்தபோது நடிகர் ரஜினி, விஜய்க்கு காங்கிரசில் சேர அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பை இருவரும் ஏற்கவில்லை. காங்கிரசில் சேரும் எண்ணம் இல்லை என்று சொல்லி ரஜினி நழுவினார். விஜய் காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யும் ராகுலும் டெல்லியில் சந்தித்து பேசினர். இதன் மூலம் விஜய்க்கு இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் காங்கிரசில் அவர் இணைவார் என்றும் பேசப்பட்டது.

ஆனால் விஜய் காங்கிரசில் சேரும் திட்டம் இல்லை என்று தெளிவுப்படுத்தி விட்டார். ராகுலை மரியாதை நிமித்தம் சந்தித்ததாகவும் இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் கூறி விட்டார். எதிர் காலத்தில் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டம் உள்ளது என்றும் தெளிவுப்படுத்தினார்.

இதுபற்றி முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் கூறியதாவது:-

ராகுல்காந்தி தமிழகம் வந்தபோது பெரும் கூட்டம் கூடியது. தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என்பதை இந்த சுற்றுப்பயணம் உணர்த்தி விட்டது. பிற அரசியல் கட்சியினர் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யை ராகுல் காந்தி சந்தித்து பேசியதாக செய்திகள் வந்துள்ளன. விஜய்யை ராகுல் சந்திக்க வில்லை. தன்னை சந்திக்கும் படி விஜய் கேட்டார். அதற்கு ராகுல் நேரம் ஒதுக்கி கொடுத்தார். அந்த சந்திப்பை தமிழக காங்கிரஸ்காரர்கள் கொண்டாடவும் இல்லை. ஒதுக்கித்தள்ளவும் இல்லை.

ரஜினியானாலும் விஜய்யானாலும் இவர்கள் முதலில் இந்திய குடிமக்கள். அதன் பிறகு தான் நடிகர்கள். எந்த நடிகரையும் நம்பி காங்கிரஸ் இல்லை. விருப்புமுள்ள யார் வேண்டுமானாலும் காங்கிரசில் சேரலாம்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

(எவளவுதான் இருந்தாலும் இளங்கோவன் கருதுவது பிழைதானே.)

வியாழன், 17 செப்டம்பர், 2009

கேரளா செல்லும் விஜய்!


கடைசியில் விஜய்யின் ஐம்பதாவது படத்தின் பெயர் சுறா என்று உறுதியாகவும், இறுதியாகவும் முடிவு செய்துவிட்டார்கள். இந்தப் படத்தில் மீனவராக வருகிறாராம் விஜய்.

படத்தின் ஒவ்வொரு பிரேமும் அழகாக, பிரமாண்டமாக வரவேண்டும் என்பது விஜய் தரப்பு கட்டளை. அதனால் அழகான கடற்கரையை தேடி கேரளா பக்கம் ஒதுங்குகிறார்கள். செப்டம்பர் 18ஆம் தேதி கேரளா செல்லும் யூனிட் அறுபது நாட்கள் கழித்தே சென்னை திரும்புகிறது.

தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், குறிப்பாக முட்டம் போன்ற பகுதிகள் ஏற்கனவே பலப் படங்களில் காட்டப்பட்டுவிட்டது. பிரெஷ்ஷான இடத்திற்காகதான் சுறா யூனிட் கேரளா செல்கிறது.

படத்துக்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஜோடியாக நடிப்பவர் தமன்னா. கதை, திரைக்கதை எழுதி எஸ்.பி.ரா‌ஜ்குமார் படத்தை இயக்குகிறார்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

தமிழர்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் போராடுவேன்: விஜய்


தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் எந்த ஒரு ஆபத்து வந்தாலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
காங்கிரசில் நடிகர்கள் உட்பட யார் விரும்பினாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று ராகுல்காந்தி சென்னை வந்தபோது கூறினார்.

ராகுல் காந்தியின் கருத்தை கேட்ட விஜய் ரசிகர்கள், தங்களது தலைவர் காங்கிரசில் இணைவாரா? அல்லது புதுக் கட்சி ஆரம்பிப்பாரா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னை வடபழனில் உள்ள தனது ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய விஜய், நான் அரசியலுக்கு வருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், எதிர் காலத்தல் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளது. தமிழகத் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் கலந்து ஆலோசித்துவிட்டு செய்தியாளர்களாகிய உங்கள் கருத்தறிந்த பின்னர்தான் அரசியலுக்கு வருவேன் என்றும் அறிவித்தார்.

மேலும் பேசிய விஜய், ஒரு நெருங்கிய நண்பர் மூலம் ராகுல் காந்தியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. டெல்லியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நானும் ராகுல் காந்தியும் சந்தித்து பேசினோம். என்னுடைய திரைப்பட வாழ்க்கை குறித்து ராகுல் ஆர்வமாக கேட்டறிந்தார். இளைஞர்கள் முன்னேற்றம் குறித்து பேசினோம். காங்கிரஸ் கட்சியில் இணைய ராகுல் காந்தி என்னை அழைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

நீங்கள் காங்கிரசில் இணைவதை இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்பதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த விஜய், இளைஞர்களை அரசிலுக்கு இழுப்பதில் ராகுல் முழு கவனம் செலுத்துகிறார். நானும் இளைஞர்களை அரசிலுக்கு வருவதை ஆதரிக்கிறேன். இரண்டு பேரின் நோக்கமும் ஒன்றாக இருந்தது. மற்றபடி ஒன்றும் இல்லை.

தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் எந்த ஒரு ஆபத்து வந்தாலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். மக்களுக்ககாக களத்தில் இறங்கி போராடுவேன் என்றார்.

தி.மு.க., அதிமுக போன்ற கட்சிகளுடன் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, தமிழக மக்களுக்கு எந்த அரசாவது நல்லது செய்தால் அந்த அரசோடு நானும் என் ரசிகர்களும் கைகோர்ப்பது பற்றி யோசிப்போம். அது எப்போது நடக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது என்று பதிலளித்தார் விஜய்.

அரசியலே வேணாம்


விஜய் காங்கிரஸில் சேர்ந்து விடுவார்... என்று ஒரு பக்கம்... பேசிக் கொண்டிருக்க... அவர் வந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வோம் என்று காங்கிரஸ் தரப்பு சொல்ல... விஜய் படங்களுக்கு கனடாவில் தடை என்று கனடா தமிழ் சங்கம் முழங்க...
இப்படி கடந்த வாரங்களில் விஜய் தலையை பலபேரும் பல விதத்தில் உருட்டி விட... இனிமேல் அமைதியாக இருந்தால் வேலைக்காகாது என்று நினைத்த விஜய், ‘அரசியலில் யாருடனும் இணையும் எண்ணம் இல்லை...’ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். அவருடைய மக்கள் இயக்கம் மக்களுக்கு சேவை செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்குமாம. இனி விஜய்யின் கவனம் முழுக்க முழுக்க சினிமாவில் சாதிப்பது பற்றியே இருக்கும்... என்று சொல்கிறார் இளைய தளபதி.

அனைவரும் நம்புவோமாக...

தமிழர்கள் படும் அவலத்தை பார்த்துக் கொண்டு மௌனம் சாதிக்க முடியாது: இலங்கைத் தமிழர் பற்றிய கேள்விக்கு விஜய் மழுப்பலான பதில்


இலங்கைத் தமிழருக்கு காங்கிரஸ் இழைத்த துரோகம் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், தமிழர்கள் எதிர்நோக்கி வரும் அவலங்களை பார்த்துக் கொண்டு மௌனம் சாதிக்க முடியாது என மழுப்பலாக பிரபல தென் இந்திய நடிகர் விஜய் பதிலளித்துள்ளார்.

குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு காங்கிரஸ் இழைத்த துரோகம் பற்றி கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல மறுத்துவிட்டார் விஜய்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஈழத்தமிழர் பற்றி அவரிடம் வைக்கப்பட்ட கேள்வியும், அதற்கு விஜய் தந்த பதிலும்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற உணர்வு நிலவுகிறதே...?

அதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தமிழருக்கு எதிராக எது நடந்தாலும் நான் இறங்கிவந்து போராடுவேன். உலகத்தமிழருக்கு நல்லது நடக்க களம் இறங்குவேன். என விஜய் பதிலளித்துள்ளார்.

தமிழ் மக்களின் அபிவிருத்திப் பணிகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

அரசியலில் களமிறங்கும் திட்டம் தற்போதைக்கு தமக்கு இல்லை என விஜய் அறிவித்துள்ளார்.

இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிப்புத்துறையில் அதிக நாட்டம் காட்டி வருவதாகவும், தற்போதைக்கு அரசியல் குறித்த எவ்வித நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட தாம் பின்நிற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் காங்கிரஸில் இணைந்து கொள்வார் என அண்மைக்காலமாக நிலவிய வதந்திகள் தமிழகத்தை மட்டுமன்றி உலகின் பல நாட்டுத் தமிழர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Vijai states silence cannot be adopted being aware of the catastrophes of Tamils.

Popular South Indian Actor Vijai stated, silence cannot be adopted being aware of the calamities under going by the Eelam Tamils. He said, by joining with the government, he would partake in the developments towards the Tamil people.
South Indian film idol stated, he does not have the intention of joining politics, and he met Indian Youth Congress Leader Rahul Ghandhi and had discussions in regard to many issues. The popular hero stated, he has more interest in the acting field, and presently he does not have any intention of joining politics. He mentioned he would not be reluctant to join hands with the government for the development work towards the Tamil people.

Gossips were floating and many controversies were among the Tamil nadu people and Tamils global wide, that Actor Vijai intends to join the Congress party.

விஜய் படப் பெயர் மாற்றம்


செப்டம்பர் 18 ஆம் தேதி விஜய்யின் 50வது படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். படத்துக்கு உ‌ரிமை‌க்குரல் என்று வைத்திருந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது.

விஜய் நடித்துவரும் வேட்டைக்காரன் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயா‌ரிக்கிறார். படத்தை இயக்குகிறவர் ரா‌ஜ்குமார். இவர் சமீபத்தில் சங்கிலி முருகன் தயா‌ரிப்பில் உருவான அழகர்மலை படத்தை இயக்கியவர்.

ஐம்பதாவது படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தமன்னாவுக்கு கிடைத்திருக்கிறது. படத்தில் வடிவேலும் இருக்கிறார். செப்டம்பர் 18 ஆம் தேதி படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

உ‌ரிமை‌க்குரல் என்ற பெயர் முதலில் ப‌ரிசீலனையில் இருந்தது. தற்போது படத்தின் பெயரை மாற்றியுள்ளனர். புதிய பெயர் சுறா. இந்தப் படத்தில் விஜய் மீனவ இளைஞனாக நடிப்பதால் இந்தப் பெயரை தேர்வு செய்துள்ளனர்.

திங்கள், 14 செப்டம்பர், 2009

‘வேட்டைக்காரன்’ வெற்றிக்காரன் ஆவாரா?

விஜய் அனுஷ்காவுடன் இணைந்து நடித்து வரும் படம் ‘வேட்டைக்காரன்’. இந்தப் படத்தை பாபுசிவன் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தை ஏ.வி.எம். தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் விலைக்கு வாங்கிவிட்டது. ‘போக்கிரி’க்கு அப்புறம் தொடர்ந்து அட்டர் பிளாப் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்த விஜய் ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த சமயத்தில் ‘வேட்டைக்காரனை’ சன் பிக்சர்ஸ் கேட்கவே... வந்தது போதும் என்ற விலைக்கு தள்ளிவிட்டது ஏ.வி.எம்.
இப்போதுதான் விஜய்க்கு மனதில் கொஞ்சம் நிம்மதி. இந்தப்படம் கண்டிப்பாக வெற்றிப்படம் ஆகிவிடும் என்று எண்ணுகிறார் அவர். காரணம், இந்தப் படத்தை வாங்கியிருக்கும் சன் பிக்சர்ஸ் தேவையை விட அதிகமாக விளம்பரம் செய்வார்கள் எனவே வேட்டைக்காரன் கண்டிப்பாக வெற்றிக்காரன் ஆகி விடுவான் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் விஜய்.

‘வேட்டைக்காரன்’ வெற்றிகாரனாக மாறுவானா என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்..

ராகுலைச் சந்தித்ததில் முக்கியத்துவம் ஏதுமில்லை; எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - விஜய்



இப்போதைக்கு அரசியலில் குதிக்கும் எண்ணம் இல்லை என்றும், அப்படியே எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட்டாலும் தனது ரசிகர் மன்றங்களுடன் கலந்தாலோசித்தே முடிவெடுப்பேன் என்றும் நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாகவும், கடந்த வாரம் ராகுல் காந்தி சென்னை வந்திருந்த போது அவரது முன்னிலையில் ரசிகர்களுடன் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் அவர் இணைவார் என்றும் செய்திகள் வெளிவந்தன.

கடந்த மாதம் டெல்லியில் ராகுல் காந்தியை விஜய் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து அதுபோன்ற செய்திகள் வெளிவரத் தொடங்கின.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜய் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்:

கடந்த சில நாட்களாக என்னைப்பற்றி பல்வேறு செய்திகள் வந்தன. நேற்று மாலைப் பத்திரிகை ஒன்றில் நான் இன்று உங்களை சந்திக்கப் போகிறேன் என்று அறிவித்ததை, அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக செய்தி வந்தது. அந்த அளவு பெரிய சீன்கள் என்னிடம் இல்லை. முன்பே வேட்டைக்காரன் படப்பிடிப்பையொட்டி நிருபர்களை சந்திக்க நினைத்தேன். ராஜசேகர ரெட்டி மறைவால் அது நடக்கவில்லை.

நான் இப்படி செய்யப்போகிறேன் அப்படி செய்யப் போகிறேன் என்றெல்லாம் வந்த செய்திகளை பார்த்து தனியாக உட்கார்ந்து யோசித்தேன். அது மாதிரி இருந்தால் எப்படி இருக்கும் என்றும் ஆலோசித்தேன்.

ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இச்செய்திகளால் குழப்பங்கள் ஏற்பட்டு விட்டது. அதை தெளிவுபடுத்தும் கடமை எனக்கு இருக்கிறது. எனவே சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த செய்தியாளர் சந்திப்பு..

தமிழக மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் மக்கள் இயக்கம் ஆரம்பித்தேன். கம்ப்யூட்டர் மையங்கள் திறந்தேன். புதுக்கோட்டை, புதுச்சேரி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன்.

அப்போதுதான் திடீரென்று ராகுல்ஜியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என் நல விரும்பி ஒருவர் மூலம் என்னை சந்திக்க அழைத்தார். அதை எற்று எனது தந்தையும் நானும் டெல்லி சென்றோம். நன்றாக உபசரித்து வரவேற்றார். அது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.

இந்திய அளவில் ராகுலின் பணிகள் பாராட்டும்படி உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு திறமையாக பணியாற்றினார். அவர் என்னிடம் பேசிய விதமும் வரவேற்பு அளித்த பாங்கும் ஆச்சரியப்பட வைத்தது. ஒரு மணி நேரம் பேசினோம். நிறைய விஷயங்கள் விவாதித்தோம். நான் நடிக்கும் சினிமாக்கள் பற்றி கேட்டார். மக்கள் இயக்கம் பற்றியும் விவாதித்தார்.

நான் ராகுலைச் சந்தித்ததன் மூலம் ஏதோ முடிவு எடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் எது செய்தாலும் ரசிகர்கள், பொதுமக்கள் கருத்துக்களை அறிந்துதான் செய்வேன். எனக்கு கடவுள் கொடுத்த பரிசு ரசிகர்கள்தான். அவர்களை நல்ல பாதையில் அழைத்து செல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

இப்போது நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. யாருடனும் சேரவில்லை. இப்போது நடக்காவிட்டாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது.

தமிழக மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நல்லது நடக்கும் என்றால் கண்டிப்பாக நான் எதிர் காலத்தில் அவர்களுக்காக பாடுபட தயாராவேன்.

இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.

எதிர்காலத்தில் உறுதியாக அரசியலுக்கு வருவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, வாய்ப்பு இருக்கலாம் என்று அவர் பதிலளித்தார்.

தாம் தொடங்கியுள்ள மக்கள் இயக்கம் தனிக்கட்சி ஆக மாறலாம் என்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் கூறினார்.

எப்படி காங்கிரஸ் கட்சி இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளதோ, அதேபோல் தாமும் இளைஞர்களைக் கருத்திக் கொண்டு செயல்படுவதாகவும் விஜய் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெறுவதாகவும், முதல் அமைச்சர் கருணாநிதி வயதானாலும் ஒரு இளைஞரைப் போன்று செயல்பட்டு தமிழகத்திற்கு நன்மை செய்து வருவதாகவும் விஜய் பாராட்டு தெரிவித்தார்.

அண்மையில் தமிழகம் வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, ரஜினி, விஜய் போன்றோர் காங்கிரசில் இணைந்தால் வரவேற்போம் என்று கூறியிருந்தார்.

இதற்கு ஏற்கனவே ரஜினியும் பதிலளித்து விட்டார். அவரும் இப்போதைக்கு அரசியல் எண்ணம் இல்லை என்று கூறியது நினைவிருக்கலாம்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

விஜயின் அரசியல் பிரவேசம்... சித்தர் குறித்த தேதி


திருவண்ணாமலை சித்தர் சொல்லிதான் அரசியலில் குதிக்க போகிறாராம் விஜய். அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், திருவண்ணாமலை, திருக்கடையூர் என்று இந்து கடவுள்கள் மீதும் அலாதி பக்தி வைத்திருக்கிறார் விஜயின் அம்மா ஷோபா.
அதனால் மேற்படி திருத்தலங்களுக்கு அவ்வப்போது விசிட் அடிக்கும் அவர் போகிற இடத்திலெல்லாம் பிள்ளையின் அரசியல் பிரவேசத்திற்காகவும் வேண்டிக் கொள்வாராம். அப்படி திருவண்ணாமலைக்கு போகிற போதுதான் எப்போது அரசியலுக்குள் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் வந்ததாம் சித்தரிடமிருந்து. சித்தன் போக்கு, சிவன் போக்கு என்றிருக்கும் சித்தர்கள் கூட, இப்போதெல்லாம் அரசியல் ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே என்ற சந்தேகம் இருக்கட்டும். திருமதி ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் ஒரு அற்புதமான காரியம் செய்திருக்கிறார்.

அபிராமி பட்டர் பாடிய பாடல்களை தனது குரலில் பாடி ஆடியோ தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். கடந்த வாரம் இதற்காக திருக்கடையூர் அபிராமி சன்னதிக்கு சென்றிருந்தாராம். அந்த சன்னதியில் வைத்தே இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை சிம்ப்பிளாக நடத்தியிருக்கிறது கோவில் நிர்வாகம்.

விஜயின் அம்மா கோவிலுக்கு வருகிற தகவலை ரகசியமாகவே வைத்திருக்க நினைத்தாலும், நடக்கிற காரியமா அது? விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் கோவில் வாசலில் முற்றுகையிட்டார்களாம். ரசிகர்களின் அன்புக்கு நின்று நிதானமாக நன்றி சொல்ல கூட முடியாதளவுக்கு தள்ளுமுள்ளு.

கோவிலில் என்ன வேண்டிக் கொண்டிருப்பார்? சித்தர் குறித்த தேதி சீக்கிரம் வரட்டும் என்றா?

வியாழன், 10 செப்டம்பர், 2009

நடிகர் விஜய் காங்கிரஸ் கொள்கைகளை விரும்புகிறார்: ராகுல் காந்தி


காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நடிகர் விஜய் விரும்புகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்துவதற்காக காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தி தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் மூன்றாம் நாளான இன்று, கிருஷ்ணகிரி, சேலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனியார் விமான தளத்துக்கு ராகுல் வருகிறார்.

சேலம்,கோவையில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் கலந்துரையாடிக்கொண்டிருக்கிறார்.

இச்சந்திப்பில், ’’நடிகர் விஜய் காங்கிரஸின் கொள்கைகளை விரும்புகிறார்’’என்று தெரிவித்தார்.

(விஜய் மற்றும் ரஜனி காங்க்ரசில் சேர்கிறார்கள் என்றால் நாங்கள் அதை வரவேற்போம்! என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.)

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

இளையதளபதி விஜயை பற்றி பல செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
சில ஆதரவானதும் மற்றும் சில எங்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும் வெளிவருகின்றன.
அந்த வகையில் நாங்கள் இரண்டையும் வெளியிடுகின்றோம்.சிலவரிகள் உங்கள் மனதை புன்படுதுமாறு அமைந்திருந்தால் அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்!
நாங்கள் நடத்தும் கருத்து கணிபோன்றுக்கு உங்கள் வாக்குகளை அளிக்கவும்,அதில் எதை நீங்கள் விரும்புகிரிர்களோ அதை நான்கள் பூர்த்தி செய்வதற்கு காத்திருக்கிறோம்!

விஜய்யின் முடிவும்; பாதிக்கும் பட வியாபாரமும்

‘சபாஷ் சரியான முடிவு...’ என ஆதரவு குரலெழுப்புகின்றனர். உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் பலர். விஜய் படத்துக்கு கனடா தமிழ் சங்கம் தடா போட்டுள்ளதற்குதான் இத்தனை ஆதரவும். 99 சதவீதம் உறுதியாகிவிட்டது விஜய் காங்கிரஸில் சேர்வது. உலகத்தமிழர்களின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியுள்ளது இந்த செய்தி. இதனால் அவருடைய படங்களை பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனராம். அதன் முதல் படியாக, விஜய் படத்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது கனடா தமிழ் சங்கம்.

அச்சங்கத்தின் செய்திகுறிப்பில், “ நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவர், ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இலங்கை அரசுக்கு போர் பலமும், ஆன்ம பலமும் கொடுத்துதவிய, இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருடைய படங்களை புறக்கணிப்போம். ஒரு தமிழனாக இந்த அறிக்கைக்கு விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா தமிழ்ச்சங்கத்தின் முடிவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் ஆமோதிக்க ஆரம்பித்துள்ளனர். பொதுவா வெளிநாடுகளிலும் ஒரு தமிழ் படம் வசூலை குவிப்பதற்கு காரணமே அங்கு வசிக்கும் ஈழத் தமிழர்கள்தான். அவர்கள் படத்தை பார்க்கவில்லையென்றால் FMS என்று சொல்லப்படுகிற வெளிநாட்டு சினிமா வியாபாரம் பெருமளவில் பாதிக்கும் ஆபத்திருக்கிறது.

விஜய் படம் ஜகா வாங்கிய தயாரிப்பாளர்

ஆஸ்கார் பிலிம்ஸ் பேனரில் பிரமாண்ட படங்களை எடுக்கும் ரவிச்சந்திரன் சமீபகாலமாக எடுத்து வெளியிட்ட படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்வ, அடுத்து விஜய்யை வைத்து படம் எடுக்கலாம் என்ற நினைப்பில் இருந்தார்.
ஆனால், விஜய்யின் அரசியல் பயணம், காங்கிரஸ் பிரமுகர்களுடன் சந்திப்பு என்று நாளுக்குநாள் செய்தி வந்து கொண்டிருந்தது. இதற்கு ஒரு படி மேலாக வெளிநாடு வாழ் தமிழர்கள் விஜய் படத்தை பார்க்க மாட்டோம் என்று அறிக்கை விட மனிதர் ஏகத்துக்கும் உஷாராகி விட்டார்.
விஜய்யை வைத்து படம் எடுத்தால் அவ்வளவுதான் நம்ம நிலைமை என்று நினைத்தவர் இப்போது அந்த திட்டம் இல்லை என்று சொல்லிவிட்டாராம். பின்னே இருக்காதா... பிரமாண்டமாக செலவு செய்து படத்தை எடுத்துட்டு அவரு எங்க போயி போணி பண்ணுவாரு...?

இணையத்தில் வேட்டைக்காரன்


யு டியூப் என்றாலே யு டர்ன் அடித்து ஓடுகிறார்கள். விவேக் ஒரு படத்தில் சொல்வாரே, மருதநாயகம் எடுத்தவரைக்கும் இருக்கு, வேணுமா? அந்த காமெடியை யு டியூப் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறது.

பலத்த பாதுகாப்புடன் நடந்த எந்திரன் படப்பிடிப்பை ஊடுருவி சில காட்சிகளை இணையத்தில் உலவவிட்டார்கள் சில விஷமிகள். வேட்டைக்காரன் பாடலொன்றும் இணையத்தில் வெளியானது.

பாடலை‌க் கேட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அது வேட்டைக்காரன் பாடல் அல்ல என்று தெ‌ளிவுபடுத்தினார். ஆனால் இந்தமுறை நிஜமாகவே விளையாடியிருக்கிறார்கள்.

வேட்டைக்காரனில் விஜய்யின் அறிமுக காட்சி என்ற பெய‌ரில் ஒரு வீடியோ யு டியூபில் வலம் வருகிறது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த வீடியோவில் காவல் நிலையத்தில் விஜய் ஆக்ரோஷமாக பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இது வேட்டைக்காரன் படத்தின் காட்சிதான் என்று உறுதியாக கூறுகிறார்கள் வீடியோவைப் பார்த்த வேட்டைக்காரன் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

சைபர் க்ரைம் விழிப்படைந்தால் மட்டுமே இத்தகைய மோசடிகளை தடுக்க முடியும், தமிழ் சினிமாவை காப்பாற்றவும் இயலும்

விஜய்க்கு எதிராக பெ‌ரியார் திராவிட‌ர் கழகம்

பதவி, பணம், செல்வாக்கு போன்றவற்றிற்கு திராவிட‌ர் கழகம் அடிமையான பிறகு, பெ‌ரியா‌ரின் கருத்துகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து செல்வதில் பெ‌ரியார் திராவிட‌ர் கழகமே முன்னணியில் நிற்கிறது.

ஈழத் தமிழர் நலனுக்கு எதிராக மௌனியாக இருக்கும் தமிழக அரசுக்கு திராவிட‌ர் கழகம் சாமரசம் வீசிக் கொண்டிருக்கையில் ஈழப் பிரச்சனையை உயிர் பிரச்சனையாக கையிலெடுத்து போராடி வருகிறது பெ‌ரியார் திராவிட‌ர் கழகம்.

ஈழ நலனுக்காக நடிகர் விஜய் தனது ரசிகர்களை திரட்டி உண்ணாவிரதம் இருந்த போது அதனை ஆத‌ரித்த பெ‌ரியார் திராவிட‌ர் கழகம், அதே விஜய்யை எதிர்த்து இன்று மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பை தெ‌ரிவித்துள்ளது. ஏன் இந்த கண்டனம்?
ஈழத் தமிழர் நலனுக்காக உண்ணாவிரதம் இருந்த விஜய், தனது அரசியல் பிரவேசத்துக்கு காங்கிரஸின் உதவியை நாடியிருப்பதே இதற்கு காரணம். சமீபத்தில் ராகுல் காந்தியை சந்தித்த விஜய் அவருடன் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். காங்கிரஸில் விஜய் சேர்வது குறித்தும் அப்போது பேசப்பட்டதாக‌த் தெ‌ரிகிறது.

ஈழம் எ‌ரிந்ததற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு என்பது சின்ன குழந்தைக்கே தெ‌ரியும். ரா‌ஜீவ் காந்தியின் மரணத்தை முன்னிட்டே லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன என விமர்சகர்கள் பகிரங்கமாக பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவு கொண்டாடுவதை அவரது ரசிகர்கள் பலரே விரும்பவில்லை. இதனை பகிரங்கப்படுத்தும் வகையில் பெ‌ரியார் திராவிட‌ர் கழகம் மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு போராடிய இளையதளபதியே, தமிழின படுகொலைக்கு துணை போன காங்கிரஸுடன் நட்புக்கரமா, சிந்திப்பீர் என்ற வாசகம் அதில் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர்கள் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

புதன், 2 செப்டம்பர், 2009

விஜயின் திரைப்படங்களை புறகணிக்க வேண்டும் என்பது சரியா?தவற?



திமுகவில் சேர்ந்தால் நாம் விஜய் படங்களை ஆதரிப்போமா? தேர்தலுக்காக தமிழீழம் என்று கூறிய ஜெயலலிதாவை ஆதரித்தால் சரியா?

கனடாவில் உள்ள தமிழ்ச் சங்கமொன்று விஜய் நடிக்கும் படங்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கோரியுள்ளதாக தமிழகத்தில் உள்ள இணையத்தளங்களும், பத்திரிகைகளும் பரபரப்பு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. கனடாவில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு சங்கத்தின் கருத்தை ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தின் கருத்துப் போல திரித்து விடுவதில் இவை ஏறத்தாழ வெற்றி கண்டுள்ளன. கடந்த காலங்களில் உணர்ச்சிகரமான ஒரு விடயம் வந்தால் ஏனென்று கேள்வி கேட்காமல் தமிழ் ஊடகங்கள் மௌனமாக இருப்பது வழமை. ஆனால் இன்றுள்ள நிலையில் அவ்வாறான பயணம் ஈழத் தமிழினத்தின் எதிர் காலத்திற்கு நன்மை பயக்காது என்பதே உண்மை. ஆகவே நடிகர் விஜய் விடயத்தை ஒரு புதிய கோணத்தில் திருப்பிப் பார்க்கிறோம்.

அதற்காக விஜய் காங்கிரசில் சேருவதை நாம் ஆதிரிக்கிறோம் என்று கருதிவிடாதீர்கள் முதலில் இங்குள்ள கேள்விகளை மட்டும் பாருங்கள்.

கேடுகெட்ட காங்கிரசோடு விஜய் சேர்வது தவறென்றால்…

01. மு.கருணாநிதி தலைமையிலான திமுகவில் சேர்ந்தால் நாம் விஜய் படங்களை ஆதரிப்போமா.. மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் ஈழத்தில் தமிழினமே வேரோடு அறுத்து வீசப்பட்டிருக்கிறது. காங்கிரசிற்கும், திமுகவிற்கும் என்ன வேறுபாடு..

02. விஜய் ஜெயலலிதா அம்மையாரின் அதிமுகவில் சேர்ந்தால் அவருடைய திரைப்படங்களுக்கு நாம் ஆதரவு கொடுப்போமா? ஜெயலலிதா அம்மையார் தேர்தலின்போது ஈழம் அமைப்பேன் என்று பிரச்சாரம் செய்தார். புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயே ! பராசக்தி என்று அவருக்கு வாழ்த்து மடல்களை எழுதிக் குவித்தார்கள். கடந்த காலங்களில் காங்கிரசோடு சேர்ந்து ஜெயலலிதா செய்ததை எல்லாம் அவர்கள் கணப்பொழுதில் மறந்தார்கள். இப்போது ஜெயலலிதா என்ன செய்கிறார்? வன்னியில் அடைபட்டுள்ள மக்களுக்காக எங்காவது ஓர் ஆர்பாட்டத்தை நடாத்தினாரா ? இல்லையே. தேர்தலுக்காக தமிழ் மக்கள் காதில் பூ சுற்றிய ஜெயலலிதாவுடன் சேர்வதுதான் சரியா? ஈழத்தமிழர் விடயத்தில் ஜெயலலிதாவுக்கும் மு.கருணாநிதிக்கும் காங்கிரசிற்கும் என்ன வேறுபாடு ?

இந்த இரண்டு கட்சிகளும் வடஇந்தியரின் கட்சிகளல்ல.. தமிழ்க்கட்சிகள். ஏற்கெனவே விஜய்யின் தந்தை சந்திரசேகர் திமுகவில் இருந்து அவரால் எதையும் செய்ய முடியாது போய்விட்டது. ஈழத் தமிழர் விவகாரத்தில் அவர் தொடர்ந்து ஏதோ செய்து வருவதை மறுக்க முடியாது.

நடிகர் விஜய் ஓர் ஈழத் தமிழ் பெண்மணியை மணந்துள்ளார் ஆகவே நாம் அவரை வாழ்த்துகிறோம் என்று புலம் பெயர் தமிழர் எழுதிக் குவித்த பாராட்டுக்களை நாம் மறந்துவிட முடியாது. மேலும் அவர் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில் பல போராட்டங்களை நடாத்தியவர். அப்படிப்பட்ட ஒருவர் காங்கிரசில் சேர்வது ஈழத் தமிழரை விற்பதற்கு என்று நாம் எப்படி ஒரேயடியாக முடிவு செய்யலாம்.

காங்கிரஸ் போன்ற ஒரு கட்சியை ஈழத் தமிழருக்கு சார்பாக சிந்திக்க வைக்க மு.கருணாநிதியாலோ, ஜெயலலிதாவாலோ, தங்கபாலுவாலோ, ஜி.கே. மூப்பனாரின் மகனாலோ முடியாமல் போய்விட்டது. அப்படிப்பட்ட நிலையில் விஜய்யாவது காங்கிரசின் குரோத மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயல்வார் என்று நாம் ஏன் சிந்திக்கக் கூடாது? அப்படியொரு நம்பிக்கையான கோணத்தில் நாம் ஏன் சிந்திக்க மறுத்து அவருடைய திரைப்படங்களின் பொருளாதாரத்தில் மண்ணள்ளி வீச முற்பட வேண்டும்.

விஜய் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த கருத்துக்கள் உள்ள இளைஞரும் கூட. எம்.ஜி.ஆர் காங்கிரசை ஆதரித்தபடியே ஈழத் தமிழருக்கு உதவியதைப் போல அவரும் உதவ எண்ணியிருக்கலாம். அவருடைய உள்ளத்தை நாம் சரியாக அறியாமல் அவசரப்படுவது சரியா ?

விஜய் உண்மையாக காங்கிரசில் சேரப் போகிறார் என்றால் நமது கடமை என்ன ? அவருடன் நாம் கதைக்க வேண்டும். எமது கருத்துக்களை கூற வேண்டும். அதில் எதையாவது, யாராவது செய்தோமா ? அப்படிச் செய்யாமலே நாம் அறிக்கை விடுவது சரியா?

உண்மையாகவே விஜய் காங்கிரசில் சேர்ந்துவிட்டாரா, அவர் காங்கிரசில் சேர்வதற்கு என்ன நிபந்தனை வைத்தார், அவருடைய அரசியல் கொள்கை என்ன இவைகளை அறியாமல் இப்படியான கருத்துக்களை முன் வைப்பது சரியா?

நாம் பெரிதும் பாராட்டும் தமிழ் ஈழ விரும்பி டாக்டர் ராமதாஸ் அவர்களின் மகன் டாக்டர் அன்புமணி தேர்தலுக்கு சில மாதங்கள்வரை காங்கிரஸ் அமைச்சில் இருந்தார். அப்போது மட்டும் காங்கிரஸ் தூய அமைப்பாக இருந்ததென நாம் கருதுகிறோமா?

பகிஷ்கரிப்பு, தடை இவைகளுக்கு மேல் ஆரோக்கியமாக ஒரு விடயத்தை அணுக நாம் என்றாவது முயற்சித்திருக்கிறோமா.. முயற்சித்திருந்தால் அவை எவை ? இந்த இரண்டில் எது நமக்கு நன்மை தந்திருக்கிறது ? இவைகளை ஒப்பிட்டு என்றாவது ஒரு கருத்துக் கணிப்பை மக்களிடையே நடாத்தியிருக்கிறோமா ?

விஜய்க்கு தமிழகம் முழுவதும் ஏராளம் ரசிகர்கள் இருக்கிறார்கள். புலம் பெயர் நாடுகளிலும் அவருக்கு ஏராளம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் ஈழத் தமிழினத்திற்கு எதிரான பக்கத்தில் திருப்பும் வேலையை நாம் செய்கிறோமா என்று சிந்தித்தோமா ?

விஜய் படங்களை பகிஷ்கரிக்கப் புறப்படும் நாம் பல ஈழத் தமிழர் படங்களே பகிஷ்கரிக்கப்பட்டபோது ஏன் மௌனமாக இருந்தோம்.

கலைஞர் ரீவியை பகிஷ்கரிப்போம், சன் ரீவியை பகிஷ்கரிப்போமென பலர் அறிக்கை விட்டார்கள். அதை சாத்தியமாக்க முடிந்ததா ? சிறீலங்காவின் பொருட்களை பகிஷ்கரிப்போம் என்றோம் சிலோன் ரீயை நம்மால் விட முடிந்ததா?

மற்ற நாடுகளி; உள்ளுர் அரசியல் விடயத்தில் நாம் தலையிடக்கூடாது என்று ஈழத்தின் தமிழ் தலைவர்கள் பலர் தொடர்ந்து கூறியுள்ளார்களே அதை நாம் ஏன் செவிமடுக்க மறுக்கிறோம்.

நமது மனதை களங்கம் இல்லாத சுயநலமற்ற இடத்தில் வைத்து இந்தக் கேள்விகளை கேட்டால் நமக்கு என்ன பதில் கிடைக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் இருக்கும் பத்திரிகைகள் இனியும் சிறுபிள்ளைத்தனமாக நடக்கக் கூடாது. இவ்வளவு பெரிய இழப்புக்களை சந்தித்த ஈழத் தமிழினம் இருப்பது வெளிநாடுகளில் அல்ல வவுனியா சிறைக் கொட்டடியில். நாம் சிறுபிள்ளைத்தனமாக அந்த மக்களின் வாழ்வோடு விளையாடக் கூடாது. இலங்கை மண்ணில் தமிழர்களின் வாழ்வின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விக்கு பதில் அவர்களிடமிருந்தே வரவேண்டும் என்ற சிறிய விடயம் கூட தெரியாமல் தமிழகப்பத்திரிகைகள் இப்படி நடப்பது சரியா என்பதையும் நாம் மனதில் கேட்டுப்பார்க்க வேண்டும்.

விஜய், காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருடைய படங்களை புறக்கணிப்போம்: கனடா தமிழ் சங்கம் அறிவிப்பு

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

வேட்டைக்காரன் சன்!


கடைசியாக வெளியான வில்லு, குருவி இரண்டும் சுமார் படங்கள். 49 வது படமான வேட்டைக்காரனை எப்படியாவது ஓட்டியாக வேண்டும்.
விஜய் அடிக்கும் அரசியல் ஸ்டண்ட் கூட வேட்டைக்காரனை ஓட வைக்க‌த்தான் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கும் அளவுக்கு வேட்டைக்காரன் வெற்றி அவருக்கு தேவைப்படுகிறது. கும்பிட போன தெய்வம் பைபாஸில் குறுக்கே வந்த மாதி‌‌‌‌ரி வேட்டைக்காரன் வெற்றிக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது. படத்தின் தயா‌‌‌‌ரிப்பாளர் சன் பிக்சர்சுக்கு படத்தை விற்றிருக்கிறார்.

சுமார் படங்களையே அபி‌‌‌‌ரிதமான விளம்பரத்தால் சூப்பர் ஹிட்டாக்கி பலரது வயிற்றில் அமிலத்தை அள்ளி தெ‌ளித்து வருகிறது சன் பிக்சர்ஸ். இவர்கள் வாங்கிய அயன் கண்டபடி ஓடி கலெக்ஷனில் சாதனைப் படைத்தது தெ‌ரியும். இப்போது வேட்டைக்காரனையும் இவர்களே வாங்கியிருக்கிறார்கள். எப்படி விளம்பரம் செய்வார்கள் என கற்பனை செய்வதே கடினம்.

சன் வேட்டைக்காரனை வாங்கியதால் படம் எப்படியும் ஓடிவிடும் என்ற தெம்பு விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

தீபாவளியில் முட்டி மோதும் படங்கள்


தீபாவளி என்றால் யாருக்கு கொண்டாட்டமாக இருக்கிறதோ இல்லையோ நடிகர்களின் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் கொண்டாட்டமும் வந்து விடுகிறது.
தலைவர் படம் வருமா வராதா? ஏன்று எதிர்பார்த்து ஏங்கும் ரசிகர்கள் பின்பு படம் வந்துவிட்டால் உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் நான்கு உறுதி செய்யப்பட்டுள்ளன.
சூர்யாவின் ‘ஆதவன்’, இந்தப் படம் அயன் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அடுத்து, விஜய்யின் ‘வேட்டைக்காரன்’. எம்.ஜி.ஆர். நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தின் டைட்டிலை பயன்படுத்தி களத்தில் இறங்குகிறார் விஜய். ஏற்கனவே ‘குருவி’, ‘வில்லு’ படங்கள் கொடுத்த தொடர் வீழ்ச்சியினால் இந்தப் படத்தை ஹிட் படமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘பேராண்மை’ படமும் இந்த லிஸ்டில் இடம் பிடிக்கிறது. ‘பேராண்மை’யின் இயக்குநர் ‘ஈ’ படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். ரீமேக் படங்களில் புகுந்து கல்லா கட்டும் ஜெயம் ரவி இந்தப் படத்தின் மூலம் வித்தியாசமான கதையுடன் களம் இறங்குகிறார். சன்பிக்சர்ஸ் வெளியிடும் ‘குட்டி’ படமும் இந்த வரிசையில் இடம் பெறுகிறது. ‘குட்டி’யில் தனுஷ் மற்றும் ஷ்ரேயா நடித்துள்ளார்கள்.

மேலும் எந்தெந்தப் படங்கள் வெளிவரும் என்பது போகப் போகத் தெரியும்.


நன்றிகள் விடுப்பு இணையத்தளம்.இதில் உங்கள் மனதை புண்படுத்தும் ஏதாவது வார்த்தைகள் இருந்தால் அதற்காக நாங்கள் மிகவும் வருதுகிறோம்!

VOTE





Best Actress in 2009

Best Actor in 2009

best songs in 2009

Who is your favorite Dancer in Tamil cinema History?

Who is your favorite actor?

How is this Website?

What is your favorite Movie

Vote for your favorite Movie in 2008

Best Music Director in 2009

Poll

Vijay's Best OnScreen Pair
Thrisha
Asin
Shriya
Nayanthara
Genelia
  
pollcode.com free polls

Poll

vote for your favorite song
Puli urumuthu-Vettaikaran
Unal unal-ATM
Moza Molanu-Kuruvi
Dole Dole-Pokkiri
Va va en thalaiva-Sachien
  
pollcode.com free polls