
| இனிமே விஜய் படத்தை சன் பிக்சர்ஸ் மட்டுமில்ல, எந்த ஒரு தனிப்பட்ட பெரிய விநியோக கம்பெனியிடமும் தயாரிப்பாளர் விற்க முடியாது. காரணம், வேட்டைக்காரன் ஏற்படுத்திய கசப்பான அனுபவம் தானாம். |
| ஏ.வி.எம். தயாரிப்பில் விஜய் நடித்த ‘வேட்டைக்காரனை’ சன்பிக்சர்ஸிடம் விற்றுவிட்டு அப்பாடா என்று ஏவிஎம் ஒதுங்கிக் கொள்ள, படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் அதில் கொஞ்சம் எடிட்டிங் செய்துவிட்டதாக விஜய்க்கு காதுவழி செய்திகள் போயிருக்கின்றன.
இந்த அனுபவத்தினால் இனிமேல் படம் ஒப்பந்தம் போடும் போதே நேரடியாக விநியோகஸ்தருக்கே படத்தை விற்க வேண்டும் என்று ஒரு கண்டிஷனையும் போடப்போகிறாராம் விஜய். |
இதனால் கோபமான விஜய், படத்தை பார்க்க வேண்டும் என்று அவரது அப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.. உடனே அவரும் எ.வி.எம்..மிற்கு போன் செய்ய அவர்களோ, ரைட்ஸ் எல்லாமே சன் பிக்சர்ஸிடம் தான் இருக்கிறது நான் என்ன செய்வது... இருந்தாலும் கேட்டுச் சொல்கிறேன்... என்று சொல்லிவிட்டு சன்பிக்சர்சுக்கு போனைப் போட, அவர்களோ இப்போதைக்கு முடியாது என்று மறுத்திருக்கிறார்கள். இதை தயங்கித் தயங்கியே எஸ்.ஏ. சந்திரசேகரிடம் சொல்லியிருக்கிறது ஏ.வி.எம். தரப்பு. இதைக் கேட்டு கோபமுற்ற அவர், ‘என்ன இது அநியாயமா இருக்கு... படத்தில நடிச்ச ஹீரோவுக்கே போட்டு காட்ட மாட்டேங்குறாங்க... படம் ரிலீசாகிறப்ப தான் பார்க்கணுமா...?’ என்று கோபப்பட எப்படியோ ஒரு வழியாக தயாரிப்புத் தரப்பு அவரை சமாதானப்படுத்தியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக