தலைவர் படம் வருமா வராதா? ஏன்று எதிர்பார்த்து ஏங்கும் ரசிகர்கள் பின்பு படம் வந்துவிட்டால் உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் நான்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. சூர்யாவின் ‘ஆதவன்’, இந்தப் படம் அயன் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அடுத்து, விஜய்யின் ‘வேட்டைக்காரன்’. எம்.ஜி.ஆர். நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தின் டைட்டிலை பயன்படுத்தி களத்தில் இறங்குகிறார் விஜய். ஏற்கனவே ‘குருவி’, ‘வில்லு’ படங்கள் கொடுத்த தொடர் வீழ்ச்சியினால் இந்தப் படத்தை ஹிட் படமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய். ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘பேராண்மை’ படமும் இந்த லிஸ்டில் இடம் பிடிக்கிறது. ‘பேராண்மை’யின் இயக்குநர் ‘ஈ’ படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். ரீமேக் படங்களில் புகுந்து கல்லா கட்டும் ஜெயம் ரவி இந்தப் படத்தின் மூலம் வித்தியாசமான கதையுடன் களம் இறங்குகிறார். சன்பிக்சர்ஸ் வெளியிடும் ‘குட்டி’ படமும் இந்த வரிசையில் இடம் பெறுகிறது. ‘குட்டி’யில் தனுஷ் மற்றும் ஷ்ரேயா நடித்துள்ளார்கள். மேலும் எந்தெந்தப் படங்கள் வெளிவரும் என்பது போகப் போகத் தெரியும். நன்றிகள் விடுப்பு இணையத்தளம்.இதில் உங்கள் மனதை புண்படுத்தும் ஏதாவது வார்த்தைகள் இருந்தால் அதற்காக நாங்கள் மிகவும் வருதுகிறோம்! |
சூர்யாவின் ‘ஆதவன்’, இந்தப் படம் அயன் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அடுத்து, விஜய்யின் ‘வேட்டைக்காரன்’. எம்.ஜி.ஆர். நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தின் டைட்டிலை பயன்படுத்தி களத்தில் இறங்குகிறார் விஜய். ஏற்கனவே ‘குருவி’, ‘வில்லு’ படங்கள் கொடுத்த தொடர் வீழ்ச்சியினால் இந்தப் படத்தை ஹிட் படமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக