
விஜய்யின் 49வது படமான வேட்டைக்காரன் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் முதல் முறையாக nஜாடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா.கடைசியாக வெளியான இரண்டு படங்களும் சுமாராகப் போனதால் வேட்டைக்காரன் படப்பிடிப்பு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தொடங்கியது. ராஜமுந்திரியில் தொடங்கிய படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடர்ந்தது.தற்போது கிளைமாக்ஸ் காட்சி ஏவி.எம். ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு வருகிறது. கிளைமாக்ஸ் முடிந்தால் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் பாக்கி. அதனை புனேயில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஆந்திராவில் எடுத்த விஜய்யின் அறிமுகப் பாடலில் அவரது மகன் சஞ்சய் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். அடுத்த மாதம் ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்கு படம் வெளியாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக