
விஜய் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமான தீபாவளி. அவர்கள் எதிர்பார்த்த வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகவில்லை. அதே நேரம் அவர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்றும் இருக்கிறது. அது சுறா.
விஜய்யின் ஐம்பதாவது படமான இதனை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கி வருகிறார். தமன்னா ஜோடி. கேரளாவில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. வேட்டைக்காரன் வெளியான மூன்று மாதத்திற்குள் சுறாவை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
தற்போது சுறா யூனிட் மரக்காணத்தில் முகாமிட்டுள்ளது. இங்கு பிரமாண்ட அரங்குகள் அமைத்து ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக் காட்சியை எடுக்க திட்டமிட்டுள்ளனர். எல்லா வகையிலும் சுறா பிரமாதமாக இருக்க வேண்டும் என்பதற்காக பணத்தை வாரி இறைக்கிறார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன்.
பாடல் காட்சிக்கு வெளிநாடு செல்லும் திட்டமும் இருக்கிறதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக