குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு காங்கிரஸ் இழைத்த துரோகம் பற்றி கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல மறுத்துவிட்டார் விஜய். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈழத்தமிழர் பற்றி அவரிடம் வைக்கப்பட்ட கேள்வியும், அதற்கு விஜய் தந்த பதிலும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற உணர்வு நிலவுகிறதே...?
அதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தமிழருக்கு எதிராக எது நடந்தாலும் நான் இறங்கிவந்து போராடுவேன். உலகத்தமிழருக்கு நல்லது நடக்க களம் இறங்குவேன். என விஜய் பதிலளித்துள்ளார்.
தமிழ் மக்களின் அபிவிருத்திப் பணிகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
அரசியலில் களமிறங்கும் திட்டம் தற்போதைக்கு தமக்கு இல்லை என விஜய் அறிவித்துள்ளார்.
இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிப்புத்துறையில் அதிக நாட்டம் காட்டி வருவதாகவும், தற்போதைக்கு அரசியல் குறித்த எவ்வித நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட தாம் பின்நிற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் காங்கிரஸில் இணைந்து கொள்வார் என அண்மைக்காலமாக நிலவிய வதந்திகள் தமிழகத்தை மட்டுமன்றி உலகின் பல நாட்டுத் தமிழர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
Vijai states silence cannot be adopted being aware of the catastrophes of Tamils.
| Popular South Indian Actor Vijai stated, silence cannot be adopted being aware of the calamities under going by the Eelam Tamils. He said, by joining with the government, he would partake in the developments towards the Tamil people.
| South Indian film idol stated, he does not have the intention of joining politics, and he met Indian Youth Congress Leader Rahul Ghandhi and had discussions in regard to many issues. The popular hero stated, he has more interest in the acting field, and presently he does not have any intention of joining politics. He mentioned he would not be reluctant to join hands with the government for the development work towards the Tamil people.
Gossips were floating and many controversies were among the Tamil nadu people and Tamils global wide, that Actor Vijai intends to join the Congress party. |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக