இது இவரது 50 வது படம். விஜய்யை வைத்து ‘காதலுக்கு மரியாதை’ படத்தை எடுத்த சங்கிலி முருகன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ‘காதலுக்கு மரியாதை’ விஜய் படங்களில் முதன் முதலில் மிகப்பெரிய ஹிட் அடைந்த படம் என்பதால் இந்தப் படமும் வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் விஜய். இந்தப் படத்தை இயக்குகிறார் எஸ்.பி. ராஜ்குமார். இவர் சென்டிமென்டான படங்களை எடுத்துக் கொண்டிருந்தவர். முதன்முறையாக விஜய்யுடன் இணைகிறார். விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ‘ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்களுக்கு இந்தப் படத்தைப் பற்றி ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும்... அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிற மாதிரியாக படம் இருக்கவேண்டும்’ என்று இயக்குநருக்கு அன்புக் கட்டளையிட்டிருக்கிறார் விஜய். |
Best Of IlayaThalapathy Vijay-Part 1
திங்கள், 28 செப்டம்பர், 2009
இயக்குநருக்கு விஜய் அன்புக்கட்டளை
ரஜினி வழியை விஜய் பின்பற்ற வேண்டும்! -சக்ஸேனா
| சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய பெரிய படங்களை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு முதல் எங்கள் அணுகுமுறை, படங்களைத் தேர்வு செய்யும் விதம் என எல்லாமே மாறப்போகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ படம்தான் சன் பிக்சர்ஸின் நேரடி முதல் தயாரிப்பு. எந்திரன் படத்தை கலாநிதி மாறன் மிகுந்த நம்பிக்கையுடன் தயாரிக்கிறார். அதற்கு ஏற்ப ஷங்கரும் அவரது குழுவினரும் தங்கள் படம் போல் உழைக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படம் வெளிவரும்.இந்தப் படத்துக்கு இயக்குனர் ஷங்கர் கடினமாக உழைத்து வருகிறார். அதை பார்க்கும்போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது. ரஜினியின் உழைப்பு ஒரு பிரமிப்பு. இன்னும் பல காலத்துக்கு அதைப் பற்றி இந்த திரையுலகம் பிரமிப்புடன் சொல்லிக் கொண்டுதான் இருக்கும். ரஜினி சாரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய நடிகர்கள், இளைஞர்களை அனைவருமே அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய. ரஜினியின் வழியை விஜய் பயன்படுத்திக்கொண்டால் உச்சத்துக்கு வர முடியும்…, என்றார் சக்ஸேனா.] இந்த மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர், எந்திரன் படம் 85 சதவிகிதத்துக்கும் மேல் முடிந்துவிட்டதாகவும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், “எப்போது விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறீர்கள் என்று வெளியூர் சென்றாலும் ரசிகர்கள் கேட்கிறார்கள். ‘முதல்வன்’ படத்தில் முதலில் நடிக்க வைக்க எண்ணியது ரஜினியை. அவர் கிடைக்காவிட்டால் விஜய்யை வைத்து இயக்க நினைத்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கிறது. நான் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 7 வருடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். விரைவில் விஜய்யை வைத்து படம் செய்யும் திட்டம் உள்ளது. என் குருநாதர் மகன் அவர் என்பதால் மட்டுமல்ல… அவர் திறமையான நடிகர்… அவர் ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது…,” என்றார். பின்னர் பேசிய விஜய், அடுத்த வரவிருக்கும் தன்னுடைய ஒரு படத்திலிருந்து பாடல் வரிகளைப் பாடிக் காட்டினார். “நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் தூங்கமட்டே மோதி பாரு வீடு போயி சேரமாட்டே…” -இப்படிப் போகின்றன அந்தப் பாடல் வரிகள்…!! எங்களுடைய தள தள தளபதி வேறொருவரின் வழியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை! அவரொரு சுபெர்ச்டார் என்றால் இவரும் ஒரு சுபெர்ச்டார் தான். |
சனி, 26 செப்டம்பர், 2009
ஆனால் இந்த பகையை மறந்து பரவச நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் ஒரு விஷயத்தில்! லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடும் ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி. அதில்தான் இந்த சூப்பர் ஹீரோக்கள் கலந்து கொண்டு பாடி நடிக்கப் போகிறார்களாம். ஆஹா... ஒன்ணு கூடிட்டாங்களே என்று ரசிகர்கள் சந்தோஷப்பட வேண்டாம். இவர்களை அணுகும் போதே “எல்லாரும் ஒரே பிரேமில் வர்றது கஷ்டம்” என்று கூறிவிட்டார்களாம் தெளிவாக.
“அவரு வராத நாளா சொல்லுங்க. நான் வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிடுறேன்” என்று கிளிப்பிள்ளை மாதிரி ஒரே வார்த்தையை ஒப்பித்தார்களாம் நால்வரும். “பிஸியாக இருப்பதால் நாங்கள் சொல்லுகிற தேதியில் படப்பிடிப்பை வைத்தால் சவுரியமாக இருக்கும்” என்று அடிஷனல் வேண்டுகோளும் வைத்தார்களாம்.
எல்லாவற்றும் தலையசைத்து சம்மதித்திருக்கிறது இந்த ஆல்பத்தை எடுக்க முடிவு செய்த டீம். இதே கல்லூரியில் படித்த இயக்குனர்களும் இதில் நடிப்பார்கள் என்பது கூடுதல் பீட்ஸா!
வியாழன், 24 செப்டம்பர், 2009
வேட்டைக்காரன்
இளங்கோவன் கூறினார்.
| ராகுல்காந்தி சென்னை வந்தபோது நடிகர் ரஜினி, விஜய்க்கு காங்கிரசில் சேர அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பை இருவரும் ஏற்கவில்லை. காங்கிரசில் சேரும் எண்ணம் இல்லை என்று சொல்லி ரஜினி நழுவினார். விஜய் காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யும் ராகுலும் டெல்லியில் சந்தித்து பேசினர். இதன் மூலம் விஜய்க்கு இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் காங்கிரசில் அவர் இணைவார் என்றும் பேசப்பட்டது. ஆனால் விஜய் காங்கிரசில் சேரும் திட்டம் இல்லை என்று தெளிவுப்படுத்தி விட்டார். ராகுலை மரியாதை நிமித்தம் சந்தித்ததாகவும் இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் கூறி விட்டார். எதிர் காலத்தில் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டம் உள்ளது என்றும் தெளிவுப்படுத்தினார். இதுபற்றி முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் கூறியதாவது:- ராகுல்காந்தி தமிழகம் வந்தபோது பெரும் கூட்டம் கூடியது. தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என்பதை இந்த சுற்றுப்பயணம் உணர்த்தி விட்டது. பிற அரசியல் கட்சியினர் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். நடிகர் விஜய்யை ராகுல் காந்தி சந்தித்து பேசியதாக செய்திகள் வந்துள்ளன. விஜய்யை ராகுல் சந்திக்க வில்லை. தன்னை சந்திக்கும் படி விஜய் கேட்டார். அதற்கு ராகுல் நேரம் ஒதுக்கி கொடுத்தார். அந்த சந்திப்பை தமிழக காங்கிரஸ்காரர்கள் கொண்டாடவும் இல்லை. ஒதுக்கித்தள்ளவும் இல்லை. ரஜினியானாலும் விஜய்யானாலும் இவர்கள் முதலில் இந்திய குடிமக்கள். அதன் பிறகு தான் நடிகர்கள். எந்த நடிகரையும் நம்பி காங்கிரஸ் இல்லை. விருப்புமுள்ள யார் வேண்டுமானாலும் காங்கிரசில் சேரலாம். இவ்வாறு இளங்கோவன் கூறினார். (எவளவுதான் இருந்தாலும் இளங்கோவன் கருதுவது பிழைதானே.) |
வியாழன், 17 செப்டம்பர், 2009
கேரளா செல்லும் விஜய்!

கடைசியில் விஜய்யின் ஐம்பதாவது படத்தின் பெயர் சுறா என்று உறுதியாகவும், இறுதியாகவும் முடிவு செய்துவிட்டார்கள். இந்தப் படத்தில் மீனவராக வருகிறாராம் விஜய்.
படத்தின் ஒவ்வொரு பிரேமும் அழகாக, பிரமாண்டமாக வரவேண்டும் என்பது விஜய் தரப்பு கட்டளை. அதனால் அழகான கடற்கரையை தேடி கேரளா பக்கம் ஒதுங்குகிறார்கள். செப்டம்பர் 18ஆம் தேதி கேரளா செல்லும் யூனிட் அறுபது நாட்கள் கழித்தே சென்னை திரும்புகிறது.
தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், குறிப்பாக முட்டம் போன்ற பகுதிகள் ஏற்கனவே பலப் படங்களில் காட்டப்பட்டுவிட்டது. பிரெஷ்ஷான இடத்திற்காகதான் சுறா யூனிட் கேரளா செல்கிறது.
படத்துக்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஜோடியாக நடிப்பவர் தமன்னா. கதை, திரைக்கதை எழுதி எஸ்.பி.ராஜ்குமார் படத்தை இயக்குகிறார்.
செவ்வாய், 15 செப்டம்பர், 2009
தமிழர்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் போராடுவேன்: விஜய்
| காங்கிரசில் நடிகர்கள் உட்பட யார் விரும்பினாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று ராகுல்காந்தி சென்னை வந்தபோது கூறினார். ராகுல் காந்தியின் கருத்தை கேட்ட விஜய் ரசிகர்கள், தங்களது தலைவர் காங்கிரசில் இணைவாரா? அல்லது புதுக் கட்சி ஆரம்பிப்பாரா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதன்படி சென்னை வடபழனில் உள்ள தனது ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய விஜய், நான் அரசியலுக்கு வருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், எதிர் காலத்தல் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளது. தமிழகத் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் கலந்து ஆலோசித்துவிட்டு செய்தியாளர்களாகிய உங்கள் கருத்தறிந்த பின்னர்தான் அரசியலுக்கு வருவேன் என்றும் அறிவித்தார். மேலும் பேசிய விஜய், ஒரு நெருங்கிய நண்பர் மூலம் ராகுல் காந்தியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. டெல்லியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நானும் ராகுல் காந்தியும் சந்தித்து பேசினோம். என்னுடைய திரைப்பட வாழ்க்கை குறித்து ராகுல் ஆர்வமாக கேட்டறிந்தார். இளைஞர்கள் முன்னேற்றம் குறித்து பேசினோம். காங்கிரஸ் கட்சியில் இணைய ராகுல் காந்தி என்னை அழைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் காங்கிரசில் இணைவதை இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்பதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த விஜய், இளைஞர்களை அரசிலுக்கு இழுப்பதில் ராகுல் முழு கவனம் செலுத்துகிறார். நானும் இளைஞர்களை அரசிலுக்கு வருவதை ஆதரிக்கிறேன். இரண்டு பேரின் நோக்கமும் ஒன்றாக இருந்தது. மற்றபடி ஒன்றும் இல்லை. தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் எந்த ஒரு ஆபத்து வந்தாலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். மக்களுக்ககாக களத்தில் இறங்கி போராடுவேன் என்றார். தி.மு.க., அதிமுக போன்ற கட்சிகளுடன் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, தமிழக மக்களுக்கு எந்த அரசாவது நல்லது செய்தால் அந்த அரசோடு நானும் என் ரசிகர்களும் கைகோர்ப்பது பற்றி யோசிப்போம். அது எப்போது நடக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது என்று பதிலளித்தார் விஜய். |
அரசியலே வேணாம்
இப்படி கடந்த வாரங்களில் விஜய் தலையை பலபேரும் பல விதத்தில் உருட்டி விட... இனிமேல் அமைதியாக இருந்தால் வேலைக்காகாது என்று நினைத்த விஜய், ‘அரசியலில் யாருடனும் இணையும் எண்ணம் இல்லை...’ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். அவருடைய மக்கள் இயக்கம் மக்களுக்கு சேவை செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்குமாம. இனி விஜய்யின் கவனம் முழுக்க முழுக்க சினிமாவில் சாதிப்பது பற்றியே இருக்கும்... என்று சொல்கிறார் இளைய தளபதி.அனைவரும் நம்புவோமாக... |
தமிழர்கள் படும் அவலத்தை பார்த்துக் கொண்டு மௌனம் சாதிக்க முடியாது: இலங்கைத் தமிழர் பற்றிய கேள்விக்கு விஜய் மழுப்பலான பதில்
குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு காங்கிரஸ் இழைத்த துரோகம் பற்றி கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல மறுத்துவிட்டார் விஜய். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈழத்தமிழர் பற்றி அவரிடம் வைக்கப்பட்ட கேள்வியும், அதற்கு விஜய் தந்த பதிலும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற உணர்வு நிலவுகிறதே...? தமிழ் மக்களின் அபிவிருத்திப் பணிகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
|
விஜய் படப் பெயர் மாற்றம்

செப்டம்பர் 18 ஆம் தேதி விஜய்யின் 50வது படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். படத்துக்கு உரிமைக்குரல் என்று வைத்திருந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது.
விஜய் நடித்துவரும் வேட்டைக்காரன் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். படத்தை இயக்குகிறவர் ராஜ்குமார். இவர் சமீபத்தில் சங்கிலி முருகன் தயாரிப்பில் உருவான அழகர்மலை படத்தை இயக்கியவர்.
ஐம்பதாவது படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தமன்னாவுக்கு கிடைத்திருக்கிறது. படத்தில் வடிவேலும் இருக்கிறார். செப்டம்பர் 18 ஆம் தேதி படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
உரிமைக்குரல் என்ற பெயர் முதலில் பரிசீலனையில் இருந்தது. தற்போது படத்தின் பெயரை மாற்றியுள்ளனர். புதிய பெயர் சுறா. இந்தப் படத்தில் விஜய் மீனவ இளைஞனாக நடிப்பதால் இந்தப் பெயரை தேர்வு செய்துள்ளனர்.
திங்கள், 14 செப்டம்பர், 2009
‘வேட்டைக்காரன்’ வெற்றிக்காரன் ஆவாரா?
இந்தப் படத்தை ஏ.வி.எம். தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் விலைக்கு வாங்கிவிட்டது. ‘போக்கிரி’க்கு அப்புறம் தொடர்ந்து அட்டர் பிளாப் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்த விஜய் ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த சமயத்தில் ‘வேட்டைக்காரனை’ சன் பிக்சர்ஸ் கேட்கவே... வந்தது போதும் என்ற விலைக்கு தள்ளிவிட்டது ஏ.வி.எம். ‘வேட்டைக்காரன்’ வெற்றிகாரனாக மாறுவானா என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்..
ராகுலைச் சந்தித்ததில் முக்கியத்துவம் ஏதுமில்லை; எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - விஜய்

இப்போதைக்கு அரசியலில் குதிக்கும் எண்ணம் இல்லை என்றும், அப்படியே எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட்டாலும் தனது ரசிகர் மன்றங்களுடன் கலந்தாலோசித்தே முடிவெடுப்பேன் என்றும் நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாகவும், கடந்த வாரம் ராகுல் காந்தி சென்னை வந்திருந்த போது அவரது முன்னிலையில் ரசிகர்களுடன் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் அவர் இணைவார் என்றும் செய்திகள் வெளிவந்தன.
கடந்த மாதம் டெல்லியில் ராகுல் காந்தியை விஜய் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து அதுபோன்ற செய்திகள் வெளிவரத் தொடங்கின.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜய் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்:
கடந்த சில நாட்களாக என்னைப்பற்றி பல்வேறு செய்திகள் வந்தன. நேற்று மாலைப் பத்திரிகை ஒன்றில் நான் இன்று உங்களை சந்திக்கப் போகிறேன் என்று அறிவித்ததை, அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக செய்தி வந்தது. அந்த அளவு பெரிய சீன்கள் என்னிடம் இல்லை. முன்பே வேட்டைக்காரன் படப்பிடிப்பையொட்டி நிருபர்களை சந்திக்க நினைத்தேன். ராஜசேகர ரெட்டி மறைவால் அது நடக்கவில்லை.
நான் இப்படி செய்யப்போகிறேன் அப்படி செய்யப் போகிறேன் என்றெல்லாம் வந்த செய்திகளை பார்த்து தனியாக உட்கார்ந்து யோசித்தேன். அது மாதிரி இருந்தால் எப்படி இருக்கும் என்றும் ஆலோசித்தேன்.
ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இச்செய்திகளால் குழப்பங்கள் ஏற்பட்டு விட்டது. அதை தெளிவுபடுத்தும் கடமை எனக்கு இருக்கிறது. எனவே சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த செய்தியாளர் சந்திப்பு..
தமிழக மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் மக்கள் இயக்கம் ஆரம்பித்தேன். கம்ப்யூட்டர் மையங்கள் திறந்தேன். புதுக்கோட்டை, புதுச்சேரி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன்.
அப்போதுதான் திடீரென்று ராகுல்ஜியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என் நல விரும்பி ஒருவர் மூலம் என்னை சந்திக்க அழைத்தார். அதை எற்று எனது தந்தையும் நானும் டெல்லி சென்றோம். நன்றாக உபசரித்து வரவேற்றார். அது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.
இந்திய அளவில் ராகுலின் பணிகள் பாராட்டும்படி உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு திறமையாக பணியாற்றினார். அவர் என்னிடம் பேசிய விதமும் வரவேற்பு அளித்த பாங்கும் ஆச்சரியப்பட வைத்தது. ஒரு மணி நேரம் பேசினோம். நிறைய விஷயங்கள் விவாதித்தோம். நான் நடிக்கும் சினிமாக்கள் பற்றி கேட்டார். மக்கள் இயக்கம் பற்றியும் விவாதித்தார்.
நான் ராகுலைச் சந்தித்ததன் மூலம் ஏதோ முடிவு எடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் எது செய்தாலும் ரசிகர்கள், பொதுமக்கள் கருத்துக்களை அறிந்துதான் செய்வேன். எனக்கு கடவுள் கொடுத்த பரிசு ரசிகர்கள்தான். அவர்களை நல்ல பாதையில் அழைத்து செல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.
இப்போது நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. யாருடனும் சேரவில்லை. இப்போது நடக்காவிட்டாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது.
தமிழக மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நல்லது நடக்கும் என்றால் கண்டிப்பாக நான் எதிர் காலத்தில் அவர்களுக்காக பாடுபட தயாராவேன்.
இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.
எதிர்காலத்தில் உறுதியாக அரசியலுக்கு வருவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, வாய்ப்பு இருக்கலாம் என்று அவர் பதிலளித்தார்.
தாம் தொடங்கியுள்ள மக்கள் இயக்கம் தனிக்கட்சி ஆக மாறலாம் என்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் கூறினார்.
எப்படி காங்கிரஸ் கட்சி இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளதோ, அதேபோல் தாமும் இளைஞர்களைக் கருத்திக் கொண்டு செயல்படுவதாகவும் விஜய் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெறுவதாகவும், முதல் அமைச்சர் கருணாநிதி வயதானாலும் ஒரு இளைஞரைப் போன்று செயல்பட்டு தமிழகத்திற்கு நன்மை செய்து வருவதாகவும் விஜய் பாராட்டு தெரிவித்தார்.
அண்மையில் தமிழகம் வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, ரஜினி, விஜய் போன்றோர் காங்கிரசில் இணைந்தால் வரவேற்போம் என்று கூறியிருந்தார்.
இதற்கு ஏற்கனவே ரஜினியும் பதிலளித்து விட்டார். அவரும் இப்போதைக்கு அரசியல் எண்ணம் இல்லை என்று கூறியது நினைவிருக்கலாம்.
ஞாயிறு, 13 செப்டம்பர், 2009
விஜயின் அரசியல் பிரவேசம்... சித்தர் குறித்த தேதி
அதனால் மேற்படி திருத்தலங்களுக்கு அவ்வப்போது விசிட் அடிக்கும் அவர் போகிற இடத்திலெல்லாம் பிள்ளையின் அரசியல் பிரவேசத்திற்காகவும் வேண்டிக் கொள்வாராம். அப்படி திருவண்ணாமலைக்கு போகிற போதுதான் எப்போது அரசியலுக்குள் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் வந்ததாம் சித்தரிடமிருந்து. சித்தன் போக்கு, சிவன் போக்கு என்றிருக்கும் சித்தர்கள் கூட, இப்போதெல்லாம் அரசியல் ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே என்ற சந்தேகம் இருக்கட்டும். திருமதி ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் ஒரு அற்புதமான காரியம் செய்திருக்கிறார்.அபிராமி பட்டர் பாடிய பாடல்களை தனது குரலில் பாடி ஆடியோ தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். கடந்த வாரம் இதற்காக திருக்கடையூர் அபிராமி சன்னதிக்கு சென்றிருந்தாராம். அந்த சன்னதியில் வைத்தே இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை சிம்ப்பிளாக நடத்தியிருக்கிறது கோவில் நிர்வாகம். விஜயின் அம்மா கோவிலுக்கு வருகிற தகவலை ரகசியமாகவே வைத்திருக்க நினைத்தாலும், நடக்கிற காரியமா அது? விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் கோவில் வாசலில் முற்றுகையிட்டார்களாம். ரசிகர்களின் அன்புக்கு நின்று நிதானமாக நன்றி சொல்ல கூட முடியாதளவுக்கு தள்ளுமுள்ளு. கோவிலில் என்ன வேண்டிக் கொண்டிருப்பார்? சித்தர் குறித்த தேதி சீக்கிரம் வரட்டும் என்றா? |
வியாழன், 10 செப்டம்பர், 2009
நடிகர் விஜய் காங்கிரஸ் கொள்கைகளை விரும்புகிறார்: ராகுல் காந்தி
| தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்துவதற்காக காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தி தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மூன்றாம் நாளான இன்று, கிருஷ்ணகிரி, சேலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனியார் விமான தளத்துக்கு ராகுல் வருகிறார். சேலம்,கோவையில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு டெல்லி புறப்படுகிறார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் கலந்துரையாடிக்கொண்டிருக்கிறார். இச்சந்திப்பில், ’’நடிகர் விஜய் காங்கிரஸின் கொள்கைகளை விரும்புகிறார்’’என்று தெரிவித்தார். (விஜய் மற்றும் ரஜனி காங்க்ரசில் சேர்கிறார்கள் என்றால் நாங்கள் அதை வரவேற்போம்! என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.) |
வெள்ளி, 4 செப்டம்பர், 2009
சில ஆதரவானதும் மற்றும் சில எங்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும் வெளிவருகின்றன.
அந்த வகையில் நாங்கள் இரண்டையும் வெளியிடுகின்றோம்.சிலவரிகள் உங்கள் மனதை புன்படுதுமாறு அமைந்திருந்தால் அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்!
நாங்கள் நடத்தும் கருத்து கணிபோன்றுக்கு உங்கள் வாக்குகளை அளிக்கவும்,அதில் எதை நீங்கள் விரும்புகிரிர்களோ அதை நான்கள் பூர்த்தி செய்வதற்கு காத்திருக்கிறோம்!
விஜய்யின் முடிவும்; பாதிக்கும் பட வியாபாரமும்
கனடா தமிழ்ச்சங்கத்தின் முடிவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் ஆமோதிக்க ஆரம்பித்துள்ளனர். பொதுவா வெளிநாடுகளிலும் ஒரு தமிழ் படம் வசூலை குவிப்பதற்கு காரணமே அங்கு வசிக்கும் ஈழத் தமிழர்கள்தான். அவர்கள் படத்தை பார்க்கவில்லையென்றால் FMS என்று சொல்லப்படுகிற வெளிநாட்டு சினிமா வியாபாரம் பெருமளவில் பாதிக்கும் ஆபத்திருக்கிறது.
விஜய் படம் ஜகா வாங்கிய தயாரிப்பாளர்
இணையத்தில் வேட்டைக்காரன்

யு டியூப் என்றாலே யு டர்ன் அடித்து ஓடுகிறார்கள். விவேக் ஒரு படத்தில் சொல்வாரே, மருதநாயகம் எடுத்தவரைக்கும் இருக்கு, வேணுமா? அந்த காமெடியை யு டியூப் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த எந்திரன் படப்பிடிப்பை ஊடுருவி சில காட்சிகளை இணையத்தில் உலவவிட்டார்கள் சில விஷமிகள். வேட்டைக்காரன் பாடலொன்றும் இணையத்தில் வெளியானது.
பாடலைக் கேட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அது வேட்டைக்காரன் பாடல் அல்ல என்று தெளிவுபடுத்தினார். ஆனால் இந்தமுறை நிஜமாகவே விளையாடியிருக்கிறார்கள்.
வேட்டைக்காரனில் விஜய்யின் அறிமுக காட்சி என்ற பெயரில் ஒரு வீடியோ யு டியூபில் வலம் வருகிறது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த வீடியோவில் காவல் நிலையத்தில் விஜய் ஆக்ரோஷமாக பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இது வேட்டைக்காரன் படத்தின் காட்சிதான் என்று உறுதியாக கூறுகிறார்கள் வீடியோவைப் பார்த்த வேட்டைக்காரன் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.
சைபர் க்ரைம் விழிப்படைந்தால் மட்டுமே இத்தகைய மோசடிகளை தடுக்க முடியும், தமிழ் சினிமாவை காப்பாற்றவும் இயலும்
விஜய்க்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம்
ஈழத் தமிழர் நலனுக்கு எதிராக மௌனியாக இருக்கும் தமிழக அரசுக்கு திராவிடர் கழகம் சாமரசம் வீசிக் கொண்டிருக்கையில் ஈழப் பிரச்சனையை உயிர் பிரச்சனையாக கையிலெடுத்து போராடி வருகிறது பெரியார் திராவிடர் கழகம்.
ஈழ நலனுக்காக நடிகர் விஜய் தனது ரசிகர்களை திரட்டி உண்ணாவிரதம் இருந்த போது அதனை ஆதரித்த பெரியார் திராவிடர் கழகம், அதே விஜய்யை எதிர்த்து இன்று மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஏன் இந்த கண்டனம்?
ஈழத் தமிழர் நலனுக்காக உண்ணாவிரதம் இருந்த விஜய், தனது அரசியல் பிரவேசத்துக்கு காங்கிரஸின் உதவியை நாடியிருப்பதே இதற்கு காரணம். சமீபத்தில் ராகுல் காந்தியை சந்தித்த விஜய் அவருடன் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். காங்கிரஸில் விஜய் சேர்வது குறித்தும் அப்போது பேசப்பட்டதாகத் தெரிகிறது.
ஈழம் எரிந்ததற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு என்பது சின்ன குழந்தைக்கே தெரியும். ராஜீவ் காந்தியின் மரணத்தை முன்னிட்டே லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன என விமர்சகர்கள் பகிரங்கமாக பேசியும், எழுதியும் வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவு கொண்டாடுவதை அவரது ரசிகர்கள் பலரே விரும்பவில்லை. இதனை பகிரங்கப்படுத்தும் வகையில் பெரியார் திராவிடர் கழகம் மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு போராடிய இளையதளபதியே, தமிழின படுகொலைக்கு துணை போன காங்கிரஸுடன் நட்புக்கரமா, சிந்திப்பீர் என்ற வாசகம் அதில் இடம் பெற்றுள்ளது.
இந்த போஸ்டர்கள் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
புதன், 2 செப்டம்பர், 2009
விஜயின் திரைப்படங்களை புறகணிக்க வேண்டும் என்பது சரியா?தவற?

திமுகவில் சேர்ந்தால் நாம் விஜய் படங்களை ஆதரிப்போமா? தேர்தலுக்காக தமிழீழம் என்று கூறிய ஜெயலலிதாவை ஆதரித்தால் சரியா?
கனடாவில் உள்ள தமிழ்ச் சங்கமொன்று விஜய் நடிக்கும் படங்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கோரியுள்ளதாக தமிழகத்தில் உள்ள இணையத்தளங்களும், பத்திரிகைகளும் பரபரப்பு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. கனடாவில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு சங்கத்தின் கருத்தை ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தின் கருத்துப் போல திரித்து விடுவதில் இவை ஏறத்தாழ வெற்றி கண்டுள்ளன. கடந்த காலங்களில் உணர்ச்சிகரமான ஒரு விடயம் வந்தால் ஏனென்று கேள்வி கேட்காமல் தமிழ் ஊடகங்கள் மௌனமாக இருப்பது வழமை. ஆனால் இன்றுள்ள நிலையில் அவ்வாறான பயணம் ஈழத் தமிழினத்தின் எதிர் காலத்திற்கு நன்மை பயக்காது என்பதே உண்மை. ஆகவே நடிகர் விஜய் விடயத்தை ஒரு புதிய கோணத்தில் திருப்பிப் பார்க்கிறோம்.
அதற்காக விஜய் காங்கிரசில் சேருவதை நாம் ஆதிரிக்கிறோம் என்று கருதிவிடாதீர்கள் முதலில் இங்குள்ள கேள்விகளை மட்டும் பாருங்கள்.
கேடுகெட்ட காங்கிரசோடு விஜய் சேர்வது தவறென்றால்…
01. மு.கருணாநிதி தலைமையிலான திமுகவில் சேர்ந்தால் நாம் விஜய் படங்களை ஆதரிப்போமா.. மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் ஈழத்தில் தமிழினமே வேரோடு அறுத்து வீசப்பட்டிருக்கிறது. காங்கிரசிற்கும், திமுகவிற்கும் என்ன வேறுபாடு..
02. விஜய் ஜெயலலிதா அம்மையாரின் அதிமுகவில் சேர்ந்தால் அவருடைய திரைப்படங்களுக்கு நாம் ஆதரவு கொடுப்போமா? ஜெயலலிதா அம்மையார் தேர்தலின்போது ஈழம் அமைப்பேன் என்று பிரச்சாரம் செய்தார். புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயே ! பராசக்தி என்று அவருக்கு வாழ்த்து மடல்களை எழுதிக் குவித்தார்கள். கடந்த காலங்களில் காங்கிரசோடு சேர்ந்து ஜெயலலிதா செய்ததை எல்லாம் அவர்கள் கணப்பொழுதில் மறந்தார்கள். இப்போது ஜெயலலிதா என்ன செய்கிறார்? வன்னியில் அடைபட்டுள்ள மக்களுக்காக எங்காவது ஓர் ஆர்பாட்டத்தை நடாத்தினாரா ? இல்லையே. தேர்தலுக்காக தமிழ் மக்கள் காதில் பூ சுற்றிய ஜெயலலிதாவுடன் சேர்வதுதான் சரியா? ஈழத்தமிழர் விடயத்தில் ஜெயலலிதாவுக்கும் மு.கருணாநிதிக்கும் காங்கிரசிற்கும் என்ன வேறுபாடு ?
இந்த இரண்டு கட்சிகளும் வடஇந்தியரின் கட்சிகளல்ல.. தமிழ்க்கட்சிகள். ஏற்கெனவே விஜய்யின் தந்தை சந்திரசேகர் திமுகவில் இருந்து அவரால் எதையும் செய்ய முடியாது போய்விட்டது. ஈழத் தமிழர் விவகாரத்தில் அவர் தொடர்ந்து ஏதோ செய்து வருவதை மறுக்க முடியாது.
நடிகர் விஜய் ஓர் ஈழத் தமிழ் பெண்மணியை மணந்துள்ளார் ஆகவே நாம் அவரை வாழ்த்துகிறோம் என்று புலம் பெயர் தமிழர் எழுதிக் குவித்த பாராட்டுக்களை நாம் மறந்துவிட முடியாது. மேலும் அவர் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில் பல போராட்டங்களை நடாத்தியவர். அப்படிப்பட்ட ஒருவர் காங்கிரசில் சேர்வது ஈழத் தமிழரை விற்பதற்கு என்று நாம் எப்படி ஒரேயடியாக முடிவு செய்யலாம்.
காங்கிரஸ் போன்ற ஒரு கட்சியை ஈழத் தமிழருக்கு சார்பாக சிந்திக்க வைக்க மு.கருணாநிதியாலோ, ஜெயலலிதாவாலோ, தங்கபாலுவாலோ, ஜி.கே. மூப்பனாரின் மகனாலோ முடியாமல் போய்விட்டது. அப்படிப்பட்ட நிலையில் விஜய்யாவது காங்கிரசின் குரோத மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயல்வார் என்று நாம் ஏன் சிந்திக்கக் கூடாது? அப்படியொரு நம்பிக்கையான கோணத்தில் நாம் ஏன் சிந்திக்க மறுத்து அவருடைய திரைப்படங்களின் பொருளாதாரத்தில் மண்ணள்ளி வீச முற்பட வேண்டும்.
விஜய் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த கருத்துக்கள் உள்ள இளைஞரும் கூட. எம்.ஜி.ஆர் காங்கிரசை ஆதரித்தபடியே ஈழத் தமிழருக்கு உதவியதைப் போல அவரும் உதவ எண்ணியிருக்கலாம். அவருடைய உள்ளத்தை நாம் சரியாக அறியாமல் அவசரப்படுவது சரியா ?
விஜய் உண்மையாக காங்கிரசில் சேரப் போகிறார் என்றால் நமது கடமை என்ன ? அவருடன் நாம் கதைக்க வேண்டும். எமது கருத்துக்களை கூற வேண்டும். அதில் எதையாவது, யாராவது செய்தோமா ? அப்படிச் செய்யாமலே நாம் அறிக்கை விடுவது சரியா?
உண்மையாகவே விஜய் காங்கிரசில் சேர்ந்துவிட்டாரா, அவர் காங்கிரசில் சேர்வதற்கு என்ன நிபந்தனை வைத்தார், அவருடைய அரசியல் கொள்கை என்ன இவைகளை அறியாமல் இப்படியான கருத்துக்களை முன் வைப்பது சரியா?
நாம் பெரிதும் பாராட்டும் தமிழ் ஈழ விரும்பி டாக்டர் ராமதாஸ் அவர்களின் மகன் டாக்டர் அன்புமணி தேர்தலுக்கு சில மாதங்கள்வரை காங்கிரஸ் அமைச்சில் இருந்தார். அப்போது மட்டும் காங்கிரஸ் தூய அமைப்பாக இருந்ததென நாம் கருதுகிறோமா?
பகிஷ்கரிப்பு, தடை இவைகளுக்கு மேல் ஆரோக்கியமாக ஒரு விடயத்தை அணுக நாம் என்றாவது முயற்சித்திருக்கிறோமா.. முயற்சித்திருந்தால் அவை எவை ? இந்த இரண்டில் எது நமக்கு நன்மை தந்திருக்கிறது ? இவைகளை ஒப்பிட்டு என்றாவது ஒரு கருத்துக் கணிப்பை மக்களிடையே நடாத்தியிருக்கிறோமா ?
விஜய்க்கு தமிழகம் முழுவதும் ஏராளம் ரசிகர்கள் இருக்கிறார்கள். புலம் பெயர் நாடுகளிலும் அவருக்கு ஏராளம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் ஈழத் தமிழினத்திற்கு எதிரான பக்கத்தில் திருப்பும் வேலையை நாம் செய்கிறோமா என்று சிந்தித்தோமா ?
விஜய் படங்களை பகிஷ்கரிக்கப் புறப்படும் நாம் பல ஈழத் தமிழர் படங்களே பகிஷ்கரிக்கப்பட்டபோது ஏன் மௌனமாக இருந்தோம்.
கலைஞர் ரீவியை பகிஷ்கரிப்போம், சன் ரீவியை பகிஷ்கரிப்போமென பலர் அறிக்கை விட்டார்கள். அதை சாத்தியமாக்க முடிந்ததா ? சிறீலங்காவின் பொருட்களை பகிஷ்கரிப்போம் என்றோம் சிலோன் ரீயை நம்மால் விட முடிந்ததா?
மற்ற நாடுகளி; உள்ளுர் அரசியல் விடயத்தில் நாம் தலையிடக்கூடாது என்று ஈழத்தின் தமிழ் தலைவர்கள் பலர் தொடர்ந்து கூறியுள்ளார்களே அதை நாம் ஏன் செவிமடுக்க மறுக்கிறோம்.
நமது மனதை களங்கம் இல்லாத சுயநலமற்ற இடத்தில் வைத்து இந்தக் கேள்விகளை கேட்டால் நமக்கு என்ன பதில் கிடைக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் இருக்கும் பத்திரிகைகள் இனியும் சிறுபிள்ளைத்தனமாக நடக்கக் கூடாது. இவ்வளவு பெரிய இழப்புக்களை சந்தித்த ஈழத் தமிழினம் இருப்பது வெளிநாடுகளில் அல்ல வவுனியா சிறைக் கொட்டடியில். நாம் சிறுபிள்ளைத்தனமாக அந்த மக்களின் வாழ்வோடு விளையாடக் கூடாது. இலங்கை மண்ணில் தமிழர்களின் வாழ்வின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விக்கு பதில் அவர்களிடமிருந்தே வரவேண்டும் என்ற சிறிய விடயம் கூட தெரியாமல் தமிழகப்பத்திரிகைகள் இப்படி நடப்பது சரியா என்பதையும் நாம் மனதில் கேட்டுப்பார்க்க வேண்டும்.
விஜய், காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருடைய படங்களை புறக்கணிப்போம்: கனடா தமிழ் சங்கம் அறிவிப்பு
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
வேட்டைக்காரன் சன்!

கடைசியாக வெளியான வில்லு, குருவி இரண்டும் சுமார் படங்கள். 49 வது படமான வேட்டைக்காரனை எப்படியாவது ஓட்டியாக வேண்டும்.
விஜய் அடிக்கும் அரசியல் ஸ்டண்ட் கூட வேட்டைக்காரனை ஓட வைக்கத்தான் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கும் அளவுக்கு வேட்டைக்காரன் வெற்றி அவருக்கு தேவைப்படுகிறது. கும்பிட போன தெய்வம் பைபாஸில் குறுக்கே வந்த மாதிரி வேட்டைக்காரன் வெற்றிக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்சுக்கு படத்தை விற்றிருக்கிறார்.
சுமார் படங்களையே அபிரிதமான விளம்பரத்தால் சூப்பர் ஹிட்டாக்கி பலரது வயிற்றில் அமிலத்தை அள்ளி தெளித்து வருகிறது சன் பிக்சர்ஸ். இவர்கள் வாங்கிய அயன் கண்டபடி ஓடி கலெக்ஷனில் சாதனைப் படைத்தது தெரியும். இப்போது வேட்டைக்காரனையும் இவர்களே வாங்கியிருக்கிறார்கள். எப்படி விளம்பரம் செய்வார்கள் என கற்பனை செய்வதே கடினம்.
சன் வேட்டைக்காரனை வாங்கியதால் படம் எப்படியும் ஓடிவிடும் என்ற தெம்பு விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இது இவரது 50 வது படம். விஜய்யை வைத்து ‘காதலுக்கு மரியாதை’ படத்தை எடுத்த சங்கிலி முருகன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ‘காதலுக்கு மரியாதை’ விஜய் படங்களில் முதன் முதலில் மிகப்பெரிய ஹிட் அடைந்த படம் என்பதால் இந்தப் படமும் வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் விஜய்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ படம்தான் சன் பிக்சர்ஸின் நேரடி முதல் தயாரிப்பு. எந்திரன் படத்தை கலாநிதி மாறன் மிகுந்த நம்பிக்கையுடன் தயாரிக்கிறார். அதற்கு ஏற்ப ஷங்கரும் அவரது குழுவினரும் தங்கள் படம் போல் உழைக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படம் வெளிவரும்.



இப்படி கடந்த வாரங்களில் விஜய் தலையை பலபேரும் பல விதத்தில் உருட்டி விட... இனிமேல் அமைதியாக இருந்தால் வேலைக்காகாது என்று நினைத்த விஜய், ‘அரசியலில் யாருடனும் இணையும் எண்ணம் இல்லை...’ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். அவருடைய மக்கள் இயக்கம் மக்களுக்கு சேவை செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்குமாம. இனி விஜய்யின் கவனம் முழுக்க முழுக்க சினிமாவில் சாதிப்பது பற்றியே இருக்கும்... என்று சொல்கிறார் இளைய தளபதி.
வேண்டும் என்ற உத்தரவும் வந்ததாம் சித்தரிடமிருந்து. சித்தன் போக்கு, சிவன் போக்கு என்றிருக்கும் சித்தர்கள் கூட, இப்போதெல்லாம் அரசியல் ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே என்ற சந்தேகம் இருக்கட்டும். திருமதி ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் ஒரு அற்புதமான காரியம் செய்திருக்கிறார்.