விஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் யார்? மில்லியன் டாலர் பெறுமானமுள்ள இந்தக் கேள்விக்கு ஜெயம் ராஜா, சீமான் என்று இரண்டே சாய்ஸ்தான் முதலில் இருந்தது. இப்போது...? பேரரசு என்ற புதிய பெயரும் இணைந்திருக்கிறது.
பேரரசுக்கு திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை என்று மெகா பிளாப்கள் பல இருந்தாலும் விஜய்யை வைத்து இயக்கிய இரு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். நியாயப்படி அடுத்தப் படத்தை உடனே விஜய் பேரரசுக்கு தந்திருக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பார்த்து பயந்தா தெரியவில்லை, பேரரசை சற்று தள்ளியே வைத்திருக்கிறார் இளைய தளபதி.
இந்நிலையில்தான், அடுத்து விஜய்யை வைத்து இயக்கப் போறேன் என்று நெருங்கியவர்களிடம் கூறி வருகிறார் பேரரசு. அவர் ஒரு கதையை விஜய்யிடம் கூறியதாகவும், கதை அவருக்குப் பிடித்திருப்பதாகவும் பேரரசு தரப்பு கூறுகிறது.
இந்த திடீர் சலசலப்பு காரணமாக விஜய்யின் 52வது படத்தின் இயக்குனர் யார் என்பதில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக