Best Of IlayaThalapathy Vijay-Part 1

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

'சுறாவின் காதலி நான்' : தமன்னா!

சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’, 30&ம் தேதி ரிலீசாகிறது. யூனிட்டை போலவே பரபரப்பாக இருக்கிறார் தமன்னா. ‘ரிலீசை ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருக்கேன். தியேட்டர்ல ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்க்கணும். ‘நான் நடந்தால் அதிரடி’ பாட்டுக்கு தியேட்டர்ல டான்ஸ் ஆடணும் போலிருக்கு’
என குதூகலம் அடைகிறார்.

விஜய்யுடன் நடித்த அனுபவம்?

முதல் முறையா நாங்க ஜோடி சேர்ந்திருக்கோம். விளம்பரம் பார்த்தவங்க எங்க ஜோடி சூப்பரா இருக்குன்னு சொல்றாங்க. குறிப்பா ‘நான் நடந்தால் அதிரடி’ பாடல்ல, ரெண்டு பேருமே ரொம்ப ஸ்டைலிஷா இருக்கோம்னு பாராட்டுறாங்க. இதுக்கு டைரக்டர் எஸ்.பி.ராஜகுமார், கேமராமேன் ஏகாம¢பரத்துக்குதான் நன்றி சொல்லணும். விஜய் ரொம்ப எளிமையான டைப். காட்சிகள்ல வசனத்தை புரிஞ்சிட்டு நடிக்க நான் நேரம் எடுத்துக்குவேன். அதுவரைக்கும் பொறுமையா இருந்து, அவர் ஒத்துழைப்பு கொடுப்பார்.

காமெடி?

அதை பத்தி சொல்லியே ஆகணும். விஜய் படங்கள்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அவரே நல்லா காமெடி பண்ணுவார். கூட வடிவேலும் இருக்கார். சொல்லவா வேணும்? இவங்களுக்கு நடுவில நானும் காமெடி பண்ணணும்னு ராஜகுமார் சொன்னார். பயந்துபோனேன். காரணம், இவங்களுக்கு இணையா நான் காமெடி பண்ண முடியாதுன்னுதான். கடைசியா விஜய் கொடுத்த தைரியத்துல நடிச்சேன். அந்த காட்சிகள் ரொம்ப என்டர்டெயின்மென்டா வந்திருக்குன்னு டைரக்டர் பாராட்டினார்.

ஆக்ஷன் படமிது. உங்களுக்கு முக்கியத்துவம் எப்படி?

‘அயன்’, ‘படிக்காதவன்’கூட ஆக்ஷன் படங்கள்தானே. அதுல என்னோட பார்ட் ரொம்பவே முக்கியமா இருந்துச்சு. அதே மாதிரிதான் ‘சுறா’வும். மீனவ குடும்பங்களை சுத்தி நடக்கிற கதையிது. சுறாவின் காதலி நான். அந்த குப்பத்துக்கு நான் வர்றதும் விஜய்யை விரும்புறதும் அதுக்கு பிறகு நடக்கிற சம்பவங்களும் விறுவிறுப்பா இருக்கும்.

யூனிட் பற்றி?

தமிழ் படங்கள்ல எப்போவுமே எனக்கு பெஸ்ட் யூனிட்தான் கிடைச்சிருக்கு. அந்த விதத்துல நான் அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்வேன். வெளியில நமக்கு எத்தனையோ கவலைகள் இருக்கலாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா, அதையெல்லாம் மறந்து கேரக்டரோடு ஒன்றிப்போகணும். அதுக்கு ரொம்பவே ஹெல்ப்பா இருக்கிறது பட யூனிட்தான். யூனிட்ல டைரக்டர்லேருந்து லைட்பாய் வரைக்கும் சுறுசுறுப்பா சிரிச்ச முகத்தோடு இருக்கும்போது, நம்ம வேலை ஈஸி ஆயிடும். ‘சுறா’ படத்தை நாம திட்டமிட்டபடி முடிக்க யூனிட் முக்கிய காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Best Actress in 2009

Best Actor in 2009

best songs in 2009

Who is your favorite Dancer in Tamil cinema History?

Who is your favorite actor?

How is this Website?

What is your favorite Movie

Vote for your favorite Movie in 2008

Best Music Director in 2009

Poll

Vijay's Best OnScreen Pair
Thrisha
Asin
Shriya
Nayanthara
Genelia
  
pollcode.com free polls

Poll

vote for your favorite song
Puli urumuthu-Vettaikaran
Unal unal-ATM
Moza Molanu-Kuruvi
Dole Dole-Pokkiri
Va va en thalaiva-Sachien
  
pollcode.com free polls