Best Of IlayaThalapathy Vijay-Part 1
திங்கள், 19 ஏப்ரல், 2010
அமிதாப் ரசிகர் விஜய்
தொடக்க காலத்தில் வந்த நான்கைந்து படங்களுக்குப் பின் விஜயகாந்த்துடன் இணைந்து நடித்த "செந்தூரப்பாண்டி' படம்தான் விஜய்யின் பெயரை பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்தது. அந்தப் படத்தை பற்றி அடிக்கடி பேசி புளகாங்கிதம் அடைவார் விஜய்.
ஹிந்தி சினிமா மீது பெரிதும் பற்றுள்ள விஜய், அமிதாப்பின் தீவிர ரசிகர். அமிதாப் நடித்த படங்களின் ரிலீஸ் நாளன்று கண்டிப்பாக சென்னை தியேட்டர்களில் காணப்படுவார். எஎவ்வளவு பிஸியாக இருந்தாலும் வருடத்தின் சில நாள்களை மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் கழிக்க விரும்புவார். லண்டன் விசிட் கண்டிப்பாக மீடியாவுக்கு தெரிந்து விடக் கூடாது என்பது இவரின் உத்தரவுகளில் ஒன்று. விஜய்யுடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்தவர்கள் சிம்ரன், சங்கவி, ஜோதிகா, த்ரிஷா. வீட்டில் இருக்கும் இரவுப் பொழுதுகளில் ஆங்கிலப் படம் ஒன்றை கண்டிப்பாக பார்த்து விடுவார்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக