விஜய் நடிக்கும் சுறா ஏப்ரலில் திரைக்க வருகிறது. விஜய்யின் 50வது படமான இதனை ராஜ்குமார் இயக்கி வருகிறார்.
வெற்றிக்கு விஜய் அதிகம் நம்பும் இரு விஷயங்கள் வெற்றி பெற்ற ரீமேக் படம் மற்றும் வடிவேலு. இந்த இரண்டும் இந்தப் படத்தில் உண்டு.
மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் சோட்டா மும்பையை தழுவி சுறாவை எடுத்து வருகிறார்கள். இதில் விஜய்யின் அடிதடி பார்ட்னராக வருகிறார் வடிவேலு. பாவனாவின் வேடத்தில் தமன்னா.
இந்தப் படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளதை பல வாரங்கள் முன்பே தெரிவித்திருந்தோம். வேட்டைக்காரனைப் போல இழுத்தடிக்காமல் ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
மணிசர்மா இசையில் உருவாகியிருக்கும் பாடல்களை வெளிநாட்டில் படமாக்கயிருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக