| தமிழ் நாட்டில் எனக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் கேரளாவிலும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். இங்கும் எனக்கு ஆதரவு இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். |
கேரளாவில் எனது படங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களின் ஆதரவு துணைபுரிகிறது. தமிழ், மலையாள மக்களை பிரித்து பார்க்க முடியவில்லை. உங்கள் வீட்டு பிள்ளையாக என்றென்றும் உங்கள் உள்ளத்தில் இருக்க விரும்புகிறேன். சினிமாவில் நடிகர்கள் ரஜினி, கமலை ரொம்ப பிடிக்கும். அவர்கள் நடித்த படங்களை நிறைய பார்த்துள்ளேன். அதில் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன்.அதன்மூலம் எனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி ரசிகர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடித்து வருகிறேன்.ஒரு படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் டைரக்டர்தான் முக்கிய காரணம். கதைப்படி என்ன செய்யவேண்டும் என்பதை டைரக்டர்தான் முடிவு செய்வார். ஹீரோவாக இருந்தாலும், சிரிப்பு நடிகராக இருந்தாலும்,வில்லனாகஇருந்தாலும்அதனைதிறம்பட செய்ய வைப்பது டைரக்டர்தான். எனவே மலையாளமோ, தமிழோ, எந்த மொழி படமானாலும் டைரக்டர்தான் சினிமாவில் முக்கியமானவராக உள்ளார். மலையாளத்தில் நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன். கதைதான் முக்கியம். பணம் அல்ல. மலையாள டைரக்டர்களுடன் நான் பணிபுரிந்துள்ளேன். மலையாள திரைப்படங்களை ரீ-மேக் செய்து தமிழில் நடித்துள்ளேன். என்னோடு சேர்ந்து நடித்த-நடிக்காத அனைவருமே எனக்கு பிடிக்கும். எல்லோரும் ஒவ்வொரு விதத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர். |
சினிமாவில் நடிகர்கள் ரஜினி, கமலை ரொம்ப பிடிக்கும். அவர்கள் நடித்த படங்களை நிறைய பார்த்துள்ளேன். அதில் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன்.அதன்மூலம் எனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி ரசிகர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடித்து வருகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக