Best Of IlayaThalapathy Vijay-Part 1
ஞாயிறு, 17 ஜனவரி, 2010
ரீமேக் படத்தில் விஜய்
வேட்டைக்காரன் விமர்சனம் தந்த எரிச்சலும், அந்தப் படத்தின் மெகா’வில்’ தந்த மலர்ச்சியுமாக தியேட்டர் தியேட்டராக சென்று வருகிறார் இளைய தளபதி. படத்தை வெளியிட்டிருக்கும் சன் பிக்சர்ஸின் அன்பு கட்டளையாம் இந்த விசிட்.
விஜய்யின் அடுத்தப் படமான 'சுறா'வையும் சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. மோகன்லால் நடித்த சோட்டா மும்பை படத்தின் ரீமேக்தான் ‘சுறா’.
இதையடுத்து லிங்குசாமியின் இயக்கத்தில் நடிப்பதாகவும், ஜெயம் ராஜா இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் விஜய் பற்றி பலவிதப் பேச்சுகள். ஆனால் இவற்றையெல்லாம் பொய்யாக்கி இருக்கிறார் விஜய்.
‘ப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கிய சித்திக்குக்கு அடுத்தப்பட வாய்ப்பை அளித்திருக்கிறாராம் விஜய். தற்போது ‘பாடிகாட்’ படத்தை மலையாளத்தில் இயக்கி வருகிறார் சித்திக். திலீப், நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தின் ரீமேக்தான் விஜய்யின் அடுத்தப் படம்.
ஜோடி யாருங்கண்ணா,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக