மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை படத்தின் தழுவல் சுறா என்று சொல்லப்பட்டாலும், அதற்கு முற்றிலும் மாறுபட்ட காட்சிகளுடன் உருவாகி வருகிறது விஜய்யின் 50வது படம். முக்கியமாக விஜய் சம்பந்தப்பட்ட அறிமுக காட்சி.
இதுவரை தரைக்கு அடியிலிருந்து பாய்ந்து வருவது, வானத்திலிருந்து குதிப்பது என்று விதவிதமாக விஜய்யின் அறிமுக காட்சியை அமைத்திருக்கிறார்கள். கடல் மட்டும்தான் பாக்கி. சுறாவில் அதையும் விடவில்லை. சுனாமி அலைகளுக்கு நடுவே விஜய் படகு ஓட்டி வருவதுபோல் அறிமுக காட்சியை அமைத்திருக்கிறார்களாம்.
சுனாமியில் வீடு இழந்தவர்களுக்கு விஜய் உதவுவதுதான் படத்தின் மையப் பகுதி என்றும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக