அதன் பிறகு ஆளாளுக்கு பதில் குரல் கொடுக்க, எப்படியோ நடக்கவிருந்த பாராட்டு விழா, ஒரு மாதிரி நடந்து முடிந்தது.
இப்போது அந்த பாராட்டு விழாவை, கலைஞர் டி.வி. விரைவில் ஒளிபரப்புகிறது.
இதற்கான கிளிப்பிங்ஸ் மற்றும் புரமோஷனல் விளம்பரங்கள் தற்போது கலைஞர் குழும சேனல்களில் உலா வருகின்றன.
இதில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா மற்றும் நடிகைகளின் பெயர்களைக் கூட குறிப்பிடும் அறிவிப்பாளர், அந்த நட்சத்திர பட்டியலில் அஜீத் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி ஷாலினி சகிதம் பங்கேற்ற அவரது படமும் கூட தவிர்க்கப்படுகிறது. விழாவின் ஹைலைட்டே அஜீத்தின் பேச்சுதான். அதையும் கவனத்துடன் தவிர்த்து விட்டுள்ளனர்.
இப்படியொரு நிகழ்ச்சியில் அஜீத் வந்து போனார் என்றாவது காட்டுவார்களா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக