Best Of IlayaThalapathy Vijay-Part 1

வெள்ளி, 29 ஜனவரி, 2010

ஏப்ரலில் சுறா

விஜய் நடிக்கும் சுறா ஏப்ரலில் திரைக்க வருகிறது. விஜய்யின் 50வது படமான இதனை ரா‌ஜ்குமார் இயக்கி வருகிறார்.
வெற்றிக்கு விஜய் அதிகம் நம்பும் இரு விஷயங்கள் வெற்றி பெற்ற ‌‌ரீமேக் படம் மற்றும் வடிவேலு. இந்த இரண்டும் இந்தப் படத்தில் உண்டு. 
மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் சோட்டா மும்பையை தழுவி சுறாவை எடுத்து வருகிறார்கள். இதில் விஜய்யின் அடிதடி பார்ட்னராக வருகிறார் வடிவேலு. பாவனாவின் வேடத்தில் தமன்னா.
இந்தப் படத்தின் ஒட்டுமொத்த விநியோக உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளதை பல வாரங்கள் முன்பே தெ‌ரிவித்திருந்தோம். வேட்டைக்காரனைப் போல இழுத்தடிக்காமல் ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள். 
மணிசர்மா இசையில் உருவாகியிருக்கும் பாடல்களை வெளிநாட்டில் படமாக்கயிருக்கிறார்கள்.

செவ்வாய், 26 ஜனவரி, 2010

சுறாவில் 'ரிங்கா ரிங்கா' குத்து!


ரீமேக் விஷயத்தில் விஜய்யை அடித்துக் கொள்ள ஆளில்லை... ஜெயம் ரவி- ஜெயம் ராஜா கூட அப்புறம்தான்.

அந்த அளவு சேஃபாக விளையாட ஆசைப்படும் விஜய், இப்போது நடிக்கும் 50வது படமான சுறா கூட மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் சோட்டா மும்பையின் தழுவல்தான்.

இந்தப் படத்துக்குள் இன்னொரு ரீமேக் வேலையையும் செய்துள்ளார் விஜய். தெலுங்கில் வெளியான ஆர்யா-2 படத்தின் ஹிட் குத்து பாட்டான 'ரிங்கா ரிங்கா..'வை அப்படியே தமிழுக்கு உருவிக் கொண்டாராம். சும்மா இல்ல... பாட்டுக்கு தேவையான அளவு பணம் கொடுத்துள்ளார்.

தெலுங்கில் இந்தப் பாட்டுக்கு இசை தேவிஸ்ரீ பிரசாத். ஆனால் தமிழில் அதே பாட்டை மணிசர்மா ரீமிக்ஸ் பண்ணித் தருகிறாராம். தெலுங்குப் பாட்டில் பெண் குரலுக்கு முக்கியத்துவம் இருக்கும். தமிழில் அதை அப்படியே உல்டா பண்ணி விட்டார்களாம்...

ஏற்கெனவே தனது திருப்பாச்சி, சச்சின், ஆதி, குருவி, வில்லு போன்ற படங்களில் இதே வேலையைத்தான் செய்தார் விஜய்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

சனி, 23 ஜனவரி, 2010

கட‌ற்கரை‌யி‌ல் சுறா


முத‌ல்க‌ட்ட பட‌ப்‌பிடி‌ப்பை கேரளா‌வி‌ல் முடி‌த்து‌வி‌ட்டு, இர‌ண்டா‌ம் க‌ட்ட படி‌ப்‌பிடி‌ப்பு‌க்காக பா‌ண்டி‌ச்சே‌ரி‌க்கு‌ம், காரை‌க்காலு‌க்கு‌ம் இடை‌ப்ப‌ட்ட கட‌ற்கரையோ‌ர‌ங்க‌ளி‌ல் தொட‌ர்‌ந்து பட‌‌ம் ‌பிடி‌த்து வரு‌கிறது சுறா டீ‌ம்.

கதை ‌மீனவ‌ர்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டது எ‌ன்பதா‌ல் காரை‌க்கா‌‌லி‌ல் ஒரு ‌பிர‌ம்மா‌ண்டமான பெ‌ரிய ‌மீனவ‌க் கு‌ப்ப‌த்தை உருவா‌க்‌கி அ‌தி‌ல் பட‌ப்‌பிடி‌ப்பு நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். இத‌ற்காக ம‌ட்டு‌ம் ‌சில கோடிகளை செலவு செ‌ய்து‌ள்ளா‌ர் தயா‌ரி‌ப்பாள‌ர் ச‌ங்‌கில‌ி முருக‌ன்.

ப‌தினை‌ந்து நா‌ட்க‌ள் தொட‌ர்‌ந்து நடைபெறுவதா‌ல் மொ‌த்த நடிக-நடிகைகளு‌க்கு‌ம் பா‌ண்டி‌ச்சே‌ரி‌‌யிலேயே த‌ங்க வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்‌கி‌ன்றன‌ர். ‌ரிய‌ல் கு‌ப்பமாகவே இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக ‌தின‌ம் ஐநூறு‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ஜூ‌னிய‌ர் ஆ‌ட்டி‌ஸ்டுகளு‌க்கு வேலை இரு‌ந்தபடியே இரு‌க்‌கிறது

செவ்வாய், 19 ஜனவரி, 2010

மலையாளத்தில் நல்ல கதை அமைந்தால் நடிப்பேன் : விஜய்

தமிழ் நாட்டில் எனக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் கேரளாவிலும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். இங்கும் எனக்கு ஆதரவு இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
 கேரளாவில் எனது படங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களின் ஆதரவு துணைபுரிகிறது. தமிழ், மலையாள மக்களை பிரித்து பார்க்க முடியவில்லை. உங்கள் வீட்டு பிள்ளையாக என்றென்றும் உங்கள் உள்ளத்தில் இருக்க விரும்புகிறேன்.
சினிமாவில் நடிகர்கள் ரஜினி, கமலை ரொம்ப பிடிக்கும். அவர்கள் நடித்த படங்களை நிறைய பார்த்துள்ளேன். அதில் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன்.அதன்மூலம் எனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி ரசிகர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடித்து வருகிறேன்.
ஒரு படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் டைரக்டர்தான் முக்கிய காரணம். கதைப்படி என்ன செய்யவேண்டும் என்பதை டைரக்டர்தான் முடிவு செய்வார். ஹீரோவாக இருந்தாலும், சிரிப்பு நடிகராக இருந்தாலும்,வில்லனாகஇருந்தாலும்அதனைதிறம்பட செய்ய வைப்பது டைரக்டர்தான். எனவே மலையாளமோ, தமிழோ, எந்த மொழி படமானாலும் டைரக்டர்தான் சினிமாவில் முக்கியமானவராக உள்ளார்.
மலையாளத்தில் நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன். கதைதான் முக்கியம். பணம் அல்ல. மலையாள டைரக்டர்களுடன் நான் பணிபுரிந்துள்ளேன். மலையாள திரைப்படங்களை ரீ-மேக் செய்து தமிழில் நடித்துள்ளேன். என்னோடு சேர்ந்து நடித்த-நடிக்காத அனைவருமே எனக்கு பிடிக்கும். எல்லோரும் ஒவ்வொரு விதத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

ரீமேக் படத்தில் விஜய்



வேட்டைக்காரன் விமர்சனம் தந்த எரிச்சலும், அந்தப் படத்தின் மெக’வில’ தந்த மலர்ச்சியுமாக தியேட்டர் தியேட்டராக சென்று வருகிறார் இளைய தளபதி. படத்தை வெளியிட்டிருக்கும் சன் பிக்சர்ஸின் அன்பு கட்டளையாம் இந்த விசிட்.


விஜய்யின் அடுத்தப் படமான 'சுறா'வையும் சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. மோகன்லால் நடித்த சோட்டா மும்பை படத்தின் ரீமேக்தான் ‘சுற
’.

இதையடுத்து லிங்குசாமியின் இயக்கத்தில் நடிப்பதாகவும், ஜெயம் ராஜா இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் விஜய் பற்றி பலவிதப் பேச்சுகள். ஆனால் இவற்றையெல்லாம் பொய்யாக்கி இருக்கிறார் விஜய்.

‘ப்ரெண்ட்ஸ’ படத்தை இயக்கிய சித்திக்குக்கு அடுத்தப்பட வாய்ப்பை அளித்திருக்கிறாராம் விஜய். தற்போது ‘பாடிகாட’ படத்தை மலையாளத்தில் இயக்கி வருகிறார் சித்திக். திலீப், நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தின் ரீமேக்தான் விஜய்யின் அடுத்தப் படம்.

ஜோடி யாருங்கண்ணா, 

செவ்வாய், 12 ஜனவரி, 2010

Wallpapers 4 more -priyamudanvijay.blogspot.com




வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை

சென்னை : சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘வேட்டைக்காரன்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்துள்ளது.
ஏவி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ‘வேட்டைக்காரன்’. விஜய், அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். பாபு சிவன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இதற்கு 600 பிரிண்டுகள் போடப்பட்டன. தமிழில் இவ்வளவு பிரிண்ட் போடப்பட்டு எந்த படமும் வெளியானதில்லை. திரையிட்ட அனைத்து பகுதியிலும் முதல் காட்சியிலேயே வரலாறு காணாத ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. அதே நேரம், வசூலிலும் இப்படம் பெரிய சாதனை படைத்துள்ளது. 
இதுபற்றி சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘‘சென்னை நகரம், சேலம் பகுதியில் இப்படத்தை நான் விநியோகித்துள்ளேன். முதல் நாளிலேயே பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை வசூல் சாதனை படைத்துள்ள படங்களை எல்லாம் ‘வேட்டைக்காரன்’ தாண்டும். அபிராமி தியேட்டரில் முதலில் இரண்டு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தோம். வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்துவிட்டு இன்னுமொரு தியேட்டரில் ரிலீஸ் செய்துள்ளோம்‘’ என்றார்.
தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கூறும்போது, ‘‘விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய ஓபனிங்கை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் திரையிட்டும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. வசூலில் இப்படம் புதிய சாதனையை படைக்கும்’’ என்றார்.
விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, ‘‘கோவை பகுதியில் எந்த படத்துக்கும் 58 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தது இல்லை. ‘வேட்டைக்காரன்’ அந்த சாதனையை செய்திருக்கிறது. முதல் நாள் வசூல் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. இப்படியொரு ஓபனிங் எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை’’ என்றார்.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

சுறாவில் ச‌ச்‌சி‌ன், தோ‌னி

விஜய் வேட்டைக்காரனுக்குப் பின் அதிரடியாய் களமிறங்கும் படம் சுறா. வேட்டைக்காரன் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால் சுறா சீன்களை மிகவும் அற்புதமாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.

காமெடிக்கு பெயர்போன இயக்குனரான இவர், விஜய்க்காக ஒவ்வொரு காட்சியிலும் சிரிக்கும்படி ஒரு டயலாக்காவது வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மேலும் சுறாவில் ஏதேனும் புதுமையாக செய்ய வேண்டும் என்பதற்காக யோசித்த விஜய், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி இருவரையும் ஒவ்வொரு காட்சியில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று கேட்க, ஒரு அரசியல் புள்ளி மூலம் தூதுவிட்டு ஓ.கே.யும் வாங்கியுள்ளார்.

எனவே, சுறா விளம்பர போஸ்டர்களில் சச்சின், தோனியும் இடம்பிடிக்கிறார்கள்

ரூ.48 கோடிக்கு சுறாவை வாங்கிய சன்!

விஜய் நடிக்கும் 50 வது படமான சுறாவை ரூ 48 கோடி கொடுத்து சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தை சமீபத்தில் சன் வெளியிட்டது. இந்தப் படத்தை வாங்கியபோதே, விஜய்யின் 50வது படமான சுறாவையும் தங்களுக்கே தரவேண்டும் என ஒப்பந்தம் போட்டது சன் என்கிறார்கள்.

வேட்டைக்காரன் வெளிவந்து, போதிய வரவேற்பைப் பெறாத நிலையில், சங்கிலி முருகன் தயாரித்து வரும் விஜய்யின் 50வது படத்தை முன்பு பேசிய விலையை விட குறைவான தொகைக்குத்தான் வாங்கிக் கொள்ள முடியும் என சன் கூறிவிட்டதாம்.

இந்த விஷயத்தில் ஏற்கெனவே அனுபவசாலி சங்கிலி. முன்பு விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தை அவர்தான் தயாரித்தார். படம் நன்றாக வந்திருந்தும், கொஞ்சம் ஸ்லோவாக இருப்பதாக நண்பர்கள் கூறியதால், வந்த விலைக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு விற்றார்.

ஆனால் ஆஸ்கர் ரவியின் நேரம், அந்தப் படம் பிளாக் பஸ்டராகி கோடிகளில் அள்ளிக் கொடுத்தது. பின்னர், வந்த லாபத்தில் சங்கிலி முருகனுக்கு ஒரு தொகையை ஆஸ்கர் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது.

இப்போது, கிட்டத்தட்ட அதே பாணியில்தான் சுறாவை விற்றுள்ளார் சங்கிலி. ஆனால் அவரைப் பொறுத்தவரை பிஸினஸ் லாபம் என்கிறார்கள். சுறாவின் கதை, மலையாளத்தில் வந்த சோட்டா மும்பை என்பதாலும், அதை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே எடுக்கப் போவது தெரிந்ததாலும்தான், தைரியமாக வாங்கியுள்ளார்களாம் சன்.

இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, உலக உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் (perpetual rights) ஒட்டு மொத்தமாக சன்னுக்கு கொடுத்துள்ளார் சங்கிலி என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 4 ஜனவரி, 2010

Best Actress in 2009

Best Actor in 2009

best songs in 2009

Who is your favorite Dancer in Tamil cinema History?

Who is your favorite actor?

How is this Website?

What is your favorite Movie

Vote for your favorite Movie in 2008

Best Music Director in 2009

Poll

Vijay's Best OnScreen Pair
Thrisha
Asin
Shriya
Nayanthara
Genelia
  
pollcode.com free polls

Poll

vote for your favorite song
Puli urumuthu-Vettaikaran
Unal unal-ATM
Moza Molanu-Kuruvi
Dole Dole-Pokkiri
Va va en thalaiva-Sachien
  
pollcode.com free polls