Best Of IlayaThalapathy Vijay-Part 1

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

தீபாவளியில் முட்டி மோதும் படங்கள்


தீபாவளி என்றால் யாருக்கு கொண்டாட்டமாக இருக்கிறதோ இல்லையோ நடிகர்களின் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் கொண்டாட்டமும் வந்து விடுகிறது.
தலைவர் படம் வருமா வராதா? ஏன்று எதிர்பார்த்து ஏங்கும் ரசிகர்கள் பின்பு படம் வந்துவிட்டால் உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் நான்கு உறுதி செய்யப்பட்டுள்ளன.
சூர்யாவின் ‘ஆதவன்’, இந்தப் படம் அயன் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அடுத்து, விஜய்யின் ‘வேட்டைக்காரன்’. எம்.ஜி.ஆர். நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தின் டைட்டிலை பயன்படுத்தி களத்தில் இறங்குகிறார் விஜய். ஏற்கனவே ‘குருவி’, ‘வில்லு’ படங்கள் கொடுத்த தொடர் வீழ்ச்சியினால் இந்தப் படத்தை ஹிட் படமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘பேராண்மை’ படமும் இந்த லிஸ்டில் இடம் பிடிக்கிறது. ‘பேராண்மை’யின் இயக்குநர் ‘ஈ’ படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். ரீமேக் படங்களில் புகுந்து கல்லா கட்டும் ஜெயம் ரவி இந்தப் படத்தின் மூலம் வித்தியாசமான கதையுடன் களம் இறங்குகிறார். சன்பிக்சர்ஸ் வெளியிடும் ‘குட்டி’ படமும் இந்த வரிசையில் இடம் பெறுகிறது. ‘குட்டி’யில் தனுஷ் மற்றும் ஷ்ரேயா நடித்துள்ளார்கள்.

மேலும் எந்தெந்தப் படங்கள் வெளிவரும் என்பது போகப் போகத் தெரியும்.


நன்றிகள் விடுப்பு இணையத்தளம்.இதில் உங்கள் மனதை புண்படுத்தும் ஏதாவது வார்த்தைகள் இருந்தால் அதற்காக நாங்கள் மிகவும் வருதுகிறோம்!

VOTE





வியாழன், 27 ஆகஸ்ட், 2009

தீபாவளிக்கு வேட்டைக்காரன்


விஜய்யின் 49வது படமான வேட்டைக்காரன் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் முதல் முறையாக nஜாடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா.கடைசியாக வெளியான இரண்டு படங்களும் சுமாராகப் போனதால் வேட்டைக்காரன் படப்பிடிப்பு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தொடங்கியது. ராஜமுந்தி‌ரியில் தொடங்கிய படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடர்ந்தது.தற்போது கிளைமாக்ஸ் காட்சி ஏவி.எம். ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு வருகிறது. கிளைமாக்ஸ் முடிந்தால் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் பாக்கி. அதனை புனேயில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஆந்திராவில் எடுத்த விஜய்யின் அறிமுகப் பாடலில் அவரது மகன் சஞ்சய் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். அடுத்த மாதம் ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

புதன், 26 ஆகஸ்ட், 2009

காங்கிரஸில் விஜய்?


ஐம்பதாவது படத்தைவிட அரசியலில்தான் அதிக ஆர்வமாக இருக்கிறார் விஜய். அவரது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சே‌ரியில் நடந்த நற்பணி மன்ற விழாவில் தனது அரசியல் ஆசையை மீண்டுமொருமுறை அழுத்தமாக வெளிப்படுத்தினார். இந்த பேச்சின் போது புதுச்சே‌ரி முதல்வர் வைத்தியலிங்கம் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெல்லி சென்ற விஜய் ராகுல் காந்தியை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கிறார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து விஜய் இதுவரை வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. அதேநேரம் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெ‌ரிவித்த அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், மிகப் பெ‌ரிய கட்சியின் பொதுச் செயலாளர் விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார். முக்கியமான விஷயம்.. ஆனால் அதுபற்றி இப்போது கூற முடியாது என சஸ்பென்ஸை நீட்டித்திருக்கிறார்.

இந்த சந்திப்பு, விஜய் காங்கிரஸில் சேரப்போகிறார் என்ற உற்சாகத்தை தொண்டர்களிடமும், எ‌ரிச்சலை தலைவர்களிடமும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்பதை.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

விஜய் - கே.எஸ். ரவிக்குமார் கூட்டணி

விஜய் ரம்பாவுடன் இணைந்து நடித்த படம் ‘மின்சார கண்ணா’. இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படம் ஓரளவு வெற்றியைப் பெற்றது. அதற்கு பின்பு விஜய்கு எத்தனையோ படங்கள் வந்தன. அவற்றில் சில ஓடின. பல தியேட்டரை விட்டே ஓடின.
சமீபகாலமாக விஜய்க்கு வெளியான படங்கள் ப்ளாப்பாகி வருவதால் அடுத்தடுத்தப் படங்கள் நன்றாக வரவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மினிமம் கேரண்டி இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படங்கள் எல்லாம் பொதுவாக ஓரளவு ஓடி தயாரிப்பாளருக்கும் சம்பாதித்துக் கொடுத்துவிடும்.
இதனால் விஜய் தனது பார்வையை இப்போது கே.எஸ். ரவிக்குமார் பக்கம் திருப்பியுள்ளார்.
தனக்கு ஒரு படம் இயக்கித் தரமுடியுமா என்று கேட்டுள்ளார் விஜய். ‘ஆதவன் வந்திடட்டுமே’ என்று சொல்லியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.

விரைவில் விஜய் - கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் அடுத்தப் படத்தை எதிர்பார்க்கலாம்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

நடன இயக்குனர் பிருந்தாவிற்கு பிடித்த நடிகர் விஜய்யாம்!


பிரபல நடன இயக்குனர் பிருந்தாவிற்கு பிடித்த நடிகர் விஜய் என்று தெரிவித்துள்ளார்.ஆதி படத்தில் இவர்தான் நடனயகுனர்.மற்றும் விஜயின் பல படங்களுக்கும் இவர்தான் நடனம் அமைத்துள்ளார்.சுவிசில் இண்டேர்லாகனில் இடம்பெற்ற ஒல்லி ஒல்லி இடுப்பு எனும் பாடலுக்கு இவர் அருமையாக நடனம் அமைத்துள்ளார்.இப் பாடல் மிகவும் பிரபலமானது எல்லாருக்குமே தெரியும்.

இந்தியா 2015 லேயே வல்லரசாகிவிடும்!

இளைஞர்களை பார்த்து 2020-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று அப்துல்கலாம் கூறி இருக்கிறார். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு, "பெற்றோர்கள் கஷ்டப்பட்டு குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் நன்றாக படித்து வெளிநாட்டில் போய் தங்கி விடுகிறார்கள். இந்தியாவில் பெற்ற கல்வியை கொண்டு வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். வெளிநாட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டு நம் நாட்டில் வேலை செய்தால் இந்தியா 2015-லேயே வல்லரசாக மாறிவிடும்", என்றார் விஜய்.

தனது 50வது படம் குறித்தும் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விக்கும் விஜய் கூறிய பதில்:

எனது ஐம்பதாவது படமான வேட்டைக்காரன், திருப்பாச்சி, சிவகாசி, கில்லி, போக்கிரி' படங்களை விட வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் எனது 50-வது படம் யாரும் எதிர்பாராத வகையில் பிரமாண்டமாக அமையும்.

நான் அரசியலுக்கு வர இஷ்டமில்லை என்று கூற மாட்டேன். எனக்கு அரசியலில் உடன்பாடு உண்டு. தற்போது எனக்கு வயது போதாது. இது அரசியலுக்குள் நுழைவதற்கான தருணம் என்று நான் நினைக்கவில்லை. அரசியலுக்கு வர நிறைய கற்று கொள்ள வேண்டும்.

அரசியல் மிகப் பெரிய கடல். அதில் மூழ்கி நீந்தி கடந்து, கரைக்கு வர வேண்டும். அதற்கு நான் என்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். எனவே நிதானமாக யோசித்து அரசியலுக்கு வருவேன், என்றார் விஜய்.

மகன் சினிமாவில் அறிமுகம்!


ரசிகர்கள் விஜய்யிடம் கேள்வி கேட்க, அவர் பதில் சொல்வது போல் நிகழ்ச்சி அமைக்கப்பட்டது.

உங்கள் குழந்தைகளும் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்தால் அனுமதிப்பீர்களா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விஜய் இப்படி பதில் கூறினார்:

"என் குழந்தைகள் இப்போது பள்ளியில் படித்து வருகிறார்கள். எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்பது அவர்களது விருப்பம். அவர்கள் எதை விரும்பினாலும் அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். புதிய படமான வேட்டைக்காரனில் ஒரே ஒரு நிமிட நடன காட்சியில் எனது மகன் சஞ்சய் ஆடி இருக்கிறான்".

ஒரே மாதிரி கெட்டப்பில் வருகிறீர்களே... எம்ஆர்ராதா, சிவாஜி மாதிரி எப்போது மாறுபட்ட தோற்றங்களில் வருவீர்கள்?, என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "இவர்கள் அனைவரும் வயதான பிறகுதான் மாறுபட்ட வேடத்தில் நடித்து உள்ளனர். நான் தற்போது இளைஞன். கொஞ்ச நாட்கள் ஆகட்டும். அப்புறம் உங்கள் விருப்பப்படி மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறேன்", என்றார்.

நிதானமாக யோசித்து அரசியலுக்கு வருவேன் - விஜய்


அரசியலுக்கு நிச்சயம் வருவேன். ஆனால் யோசித்து நிதானமாகத்தான் வருவேன் என நடிகர் விஜய் கூறினார்.
புதுவையில் நடிகர் விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இலவச கம்ப்யூட்டர் மையம் ஒன்றையும் அவர் திறந்து வைத்தார்.

விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், நடிகர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஜயின் குட்டி ரசிகர்கள்!


தமிழ் சினிமாவில் குட்டிஸ் விரும்பும் நடிகர் என்றால் விஜய்தான் காரணம் என்ன?
டான்ஸ்,யோக்,ஸ்டைல்,நடிப்பு மற்றும் பல அப்படியும் சொல்ல முடியாது பெரியவர்களுக்கும் விஜயை பிடிக்கிறது. பொதுவாக பார்த்தால் 2 வயது குட்டி கூட நீ கோவா பட்டால் என்னும் பாடலை பாடுகிறார்கள். இன்னும் ஒரு குழந்தையிடம்
உனக்கு விஜயிடம் என்ன பிடிக்கும் என கேட்டால் விஜயின் தலை முடி பிடிக்கும் என சொல்கிறார்கள். இறுதியாக ஒரு கருத்து கணிப்பை எடுப்போமானால் அதில் நம்பெர் ஒன்னு விஜய்தான்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

நான் விஜயின் ரசிகை-குஷ்பூ


நடிகை குஷ்பூவிற்கு பிடித்த நடிகர் விஜய் என்று மானாட மயிலாடவில் தெரிவித்துள்ளார். மின்சார கன்னாவில் நானும் நடித்துள்ளேன் விஜய் மிகவும் பிரமாதமாய் நடிப்பார். விஜயின் வில்லு படத்தில் கூட ராமா ராமா எனும் பாடலில் நடனமாடியுளேன்.முதலாவதாக நான் மிகவும் பயந்தேன் ஏனென்றல் விஜய் மாதிரி நான் ஆடமாட்டேன்.விஜய் மிகவும் அழகாக நடனம் ஆடுவார்.ஒரு ஸ்டேப் நல்லாவரமட்டும் ஆடிக்கொண்டே இருப்பார் எனக்கு தெரிந்தவரை எந்தவொரு ச்டேபுமே கஷ்டம் என்று சொல்லமாட்டார்.இவ்வாறு விஜயை புகழ்ந்து தள்ளியுள்ளார் குஷ்பூ.

சனி, 22 ஆகஸ்ட், 2009

மீண்டும் தரணி இயக்கத்தில் விஜய்?


மீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்கிறாராம் விஜய். இந்த செய்திதான் தற்போது இன்டஸ்ட்‌ரியை கலக்கிக் கொண்டிருக்கிறது.

விஜய் நடித்துவரும் வேட்டைக்காரன் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயா‌ரிக்க எஸ்.ஏ. ரா‌ஜ்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்க தீர்மானித்திருக்கிறாராம் விஜய்.

கில்லி, குருவி படங்களுக்குப் பிறகு இவர்கள் இணையும் இந்தப் படத்தை தயா‌ரிக்கப் போகிறவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

விஜய்யின் வில்லன்


விஜய்யின் ஐம்பதாவது படத்தை இயக்குகிறவர் எஸ்.ஏ.ரா‌ஜ்குமார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. சங்கிலி முருகன் தயா‌ரிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு விஐபி நடிகரும் நடிக்கயிருக்கிறார்.

ஐம்பதாவது படத்தை எப்படியும் ஹிட்டாக்க வேண்டும் என்பது விஜய்யின் கனவு. எஸ்.ஏ.ரா‌ஜ்குமா‌ரின் கதை தனது கனவை நிறைவேற்றும் என்று நம்புகிறார் விஜய். தமன்னா ஜோடி, காமெடிக்கு வடிவேலு என நடிப்பு சைடில் எல்லாம் ஓகே. வில்லன் மட்டுமே பாக்கி.

வில்லனாக நடிக்க விஜய்யின் சாய்ஸ் பசுபதி. திறமையான நடிகர், சமீபத்தில் எந்தப் படத்திலும் வில்லத்தனம் செய்யாததால் புதுசாகவும் தெ‌ரியும். மேலும், பிற மாநில நடிகர்களை நடிக்க வைக்கும் போது ஏற்படும் அந்நியத்தன்மையும் இருக்காது.

விஜய்யின் விருப்பம் பசுபதியிடம் தெ‌ரிவிக்கப்பட்டிருக்கிறது. பாஸிட்டிவ்வான பதிலே கிடைக்கும் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

சூரியாவை வாழ்த்தினார் விஜய்!



நாதஸ்வரங்கள் முழங்க ஆதவன் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. டைரக்டர் ஷங்கர் வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் பெற்றுக் கொண்டார். விழாவில் நடிகர் விஜய், சூர்யா, சசிக்குமார், விவேக், கவுதம் மேனன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அவர் இசையமைத்த மற்ற படங்களுக்கு பாடல்களை ஒரே நேரத்தில் அவர் கொடுத்ததில்லை. பகுதி பகுதியாக பிரித்துதான் கொடுப்பார். அவரிடமிருந்து பாடல் வரிகள் வர வர படப்பிடிப்பை நடத்துவார்கள். ஆனால் இந்த படத்திற்கு மட்டும்தான் மொத்தமாக ஒரே நேரத்தில் பாடல்களை கொடுத்தார். எங்களது அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர் என்றார் சந்தோஷமாக.
பின்னாலேயே பேச வந்த ஹாரிஸ், “இந்த படத்திற்கு நான்கே மாதத்தில் ஆறு பாடல்களை அமைத்துக் கொடுத்தேன். அதற்கு காரணம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஆர்க்கெஸ்ட்ராவுக்கு உடனுக்குடன் பணத்தை கொடுத்ததுதான். இப்படி எனது டென்ஷனை தயாரிப்பாளர் குறைத்ததால்தான் ட்யூனில் என்னால் கவனம் செலுத்த முடிந்தது” என்றார்.

சசிக்குமார் பெயரை சொல்லும் போதெல்லாம் அரங்கமே அதிரும்படி கைதட்டினார்கள் ரசிகர்கள். “பாராட்டுற மனசு வேணும். இங்கே நிறைய பேருக்கு அது இருப்பதில்லை. என்னோட சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் படத்தை பார்த்திட்டு உடனுக்குடன் பாராட்டுவார் சூர்யா சார். இப்படி இன்னொருவரை பாராட்டுகிற மனசு இருப்பதால்தான் அவர் மற்றவர்களால் பாராட்டுகிற அளவுக்கு உயர்கிறார்” என்றார் சசி.

“வாரணம் ஆயிரம் பாடலை கேட்டுட்டு “மாப்பு... ஸாங் சூப்பர்டா” என்று மெசேஜ் அனுப்பினார் விஜய். ஸ்கிரீன்லே ஆதவன் பாடல் ஓடும் போது என்னோட டான்ஸ்சை விஜய் பார்க்கிறாருங்கிற குறுகுறுப்பு இருந்திச்சு. இந்த விழாவுக்கு வந்த அவருக்கு நன்றி” என்றார் சூர்யா.

“சூர்யாவோட ஒவ்வொரு படம் வரும்போது அவரோட அசுர உழைப்பும், பிரமாண்ட வளர்ச்சியும் நல்லா தெரியுது. இந்த படம் பெரிய ஹிட் ஆகணும்” என்று வாழ்த்தினார் விஜய்.

முன்னதாக திரையிடப்பட்ட இரண்டு பாடல்கள் அசத்தலோ அசத்தல்!

புதன், 19 ஆகஸ்ட், 2009

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

Best Actress in 2009

Best Actor in 2009

best songs in 2009

Who is your favorite Dancer in Tamil cinema History?

Who is your favorite actor?

How is this Website?

What is your favorite Movie

Vote for your favorite Movie in 2008

Best Music Director in 2009

Poll

Vijay's Best OnScreen Pair
Thrisha
Asin
Shriya
Nayanthara
Genelia
  
pollcode.com free polls

Poll

vote for your favorite song
Puli urumuthu-Vettaikaran
Unal unal-ATM
Moza Molanu-Kuruvi
Dole Dole-Pokkiri
Va va en thalaiva-Sachien
  
pollcode.com free polls