Best Of IlayaThalapathy Vijay-Part 1

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

விரைவில் விஜய்-பேரரசு மீண்டும் கூட்டணி



திரைத் துறையினருக்காக ஏராளமான சலுகைகளை அளித்து வரும்முதல்வர் [^] கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது திரைத் துறையினரின் கடமையல்லவா?. அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு யாரும் கூப்பிடாமலேயே ஒருவர் போக வேண்டும் என்பது எனது எண்ணம் என்று கூறியுள்ளார் இயக்குநர் [^] பேரரசு.

பன்ச் டயலாக்குகளை பெருமளவில் நம்பி படங்களை எடுக்கும் இயக்குநர் பேரரசு. இவரது இயக்கத்தில் அஜீத், விஜய், பரத் ஆகியோர் பட்டையைக் கிளப்பியுள்ளனர்.

இந் நிலையில், பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்தார் பேரரசு. அங்கு செய்தியாளர்கள் அவரிடம், கலையுலக மோதல் குறித்து கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த பேரரசு, தமிழக அரசு சினிமாத்துறைக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. இப்படி உதவிகள் செய்து வரும் முதல்அமைச்சர் [^] கலைஞருக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது அனைத்து கலைஞர்களின் கடமை.

இப்படி நன்றி தெரிவிப்பது அல்லது பாராட்டு தெரிவிப்பது என்றால் கலைநிகழ்ச்சிகள் மூலமாகத்தான் செய்ய முடியும். எனவே இந்த நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமலேயே ஒரு கலைஞன் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.

அதேசமயம், தமிழ் சினிமாவில் வேறு மொழியை சேர்ந்த ஏராளமான தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளனர். அதுபோல் இந்தியில் தமிழ்நாட்டை சேர்ந்த பல இயக்குனர்கள், கேமராமேன்கள் புகழ்பெற்று விளங்குகிறார்கள்.

தெலுங்கு, கன்னடத்திலும் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே கலைத்துறையில் இருப்பவர்களை மொழி ரீதியாக பிரிப்பது என்பதும், வேறுபடுத்தி பார்ப்பது என்பதும் ஆரோக்கியமானது அல்ல என்றார்.

உங்களது அடுத்த படமான திருத்தணி எவ்வளவு தூரம் வந்துள்ளது என்ற கேள்விக்கு, திருத்தணி திரைப்படம் 80 சதவீத படப்பிடிப்பு [^] முடிந்து விட்டது. இந்த படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்களுடன், இசையையும் நானே அமைத்து இருக்கிறேன்.

விரைவில் வேறு புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தும் வகையில் சொந்தப்படங்கள் எடுக்க முடிவு செய்து இருக்கிறேன். நான் தயாரிக்கும் படங்கள் முழுக்க முழுக்க அந்தந்த இயக்குனர்களின் வெளிப்பாடாக இருக்கும்.

அதுபோல் நல்ல நாவல்களை திரைப்படமாக்கும் எண்ணமும் உள்ளது. எனக்கென்று ஒரு வணிக முத்திரை இருப்பதால் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகவே கலைப்படங்கள் பக்கம் என்னை திருப்ப முடியும் என்பதால் அதிரடியாக கலைப்படங்கள் உருவாக்கும் எண்ணம் தற்போது இல்லை என்றார் பேரரசு.

விஜய்யை வைத்து 2 'பட்டாசு' படங்களைக் கொடுத்த பேரரசு மீண்டும் அவருடன் விரைவில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 27 பிப்ரவரி, 2010

www.superstarvijay.blogspot.com

இளையதளபதி என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும்,டாக்டர், விஜய் அவர்கள் 1992ம் ஆண்டு நாளையதீர்ப்பு என்ற திரைப்படம் மூலமாக இளைய நாயகனாக அறிமுகமாகி இன்று அவர் கடந்து வந்த பாதைகள், வடுக்கள், இதுவரை 49 படங்கள் சினிமாவுக்குள் நுழைந்து நாயகனாக 18 வருடங்களைதொட்டு 50வது படமாகிய சூறாவளியாக « சுறா »வில் தொடரும் விஜய்.

அவரது 50வது திரைப்படமாகிய சுற வெள்ளித்திரையில் சித்திரைக்கு வெளி வருகிறது ஆகவே இதனை முன்னிட்டு உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் "அந்தமும் தொட்டு அகரமும் வரையிலான விஜயின் சினிமா வரலாறு"களும், கடந்து வந்த பதைகளும், தொடர்ந்து சினிமா நட்சத்திரமாக திகளும் விஜய் பற்றிய மேல் பார்வையிலான மாபெரும் பெட்டகம் ஒன்று "சுறா" திரைப்படத்தின் வெளியீட்டு தினம் அன்று உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் வெளியிட தயாராகிறது.
ஆகவே விஜய் அவர்களை வாழ்த்த விரும்பும் ரசிகர்பெருமக்கள், உங்களின் வாழ்த்துக்கள், அவர் இதுவரை நடித்த திரைப்படங்களில் பிடித்த , பிடிக்காத விமர்சனங்கள், கவிதைகள், அவரின் நற்பண்புகள், உங்களுக்கு அவரிடம் கவர்ந்தது, விமர்சனங்கள், கவர்ந்த திரைப்படம், அவர் தொடரும் பாதைகள் பற்றிய விமர்சனங்கள், அனைத்தும் வரவேற்க்கப்படும். நீங்கள் superstarvijayfanz@gmail.comஇவ் மின்னஞ்சல் முகவரிக்கு « சுற » வெளியீட்டு தினத்திற்க்கு முன்பாக அனுப்பி வைக்கவும், அத்துடன் உங்களின் பெயரையும் குறிப்பிடவும்.


அவர் இது வரை நடித்து வெளி வந்த சிறந்த, பிடித்த திரைப்படங்களுக்கு மேலே தரப்பட்ட poll மூலமாக வாக்களித்து உங்களின் பங்களிப்பை வழங்கவும்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

அஜீத்துக்கு விஜய் ஆதரவு .. எரிந்து விழுந்த குகநாதன்!

அஜீத் விவகாரத்தில் பெப்ஸி கடுமையான முடிவுகளை எடுத்தபோது அஜீத்[^]துக்காக சினிமா உலகில் பரிந்து பேசிய ஒரே நட்சத்திரம் சூப்பர் ஸ்டார்தான்.

ஆனால் அவருக்கும் பெப்ஸி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் கண்டனம் தெரிவித்துவிட, இன்னொரு நட்சத்திரம் யாரும் எதிர்பாராத வகையில் இதில் தலையிட்டுள்ளார்.

அவர் 
விஜய் [^]. தொழில் ரீதியாக அஜீத்துக்கு எதிரானவராக விஜய் சித்தரிக்கப்பட்டாலும் திரைக்கு வெளியே இருவரும் நட்பு பாராட்டிக் கொள்வது தொடர்கிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை இரு குடும்பத்தினரும் சேர்ந்தே கொண்டாடுகின்றனர்.

அந்த பாசத்தில், விசி குகநாதனைத் தொடர்பு கொண்ட விஜய், "அஜீத் ஒரு திறந்த புத்தகம் மாதிரி. அவர் மனதில் ஒன்றுமில்லை. நினைப்பதை உடனே கொட்டிவிடுவார். அதைப் பெரிதுபடுத்தி அவருக்கு மன உளைச்சல் தர வேண்டாம்..." என்று கேட்டுக் கொண்டாராம்.

மேலும் கடந்த புத்தாண்டு பார்ட்டியின்போது, நடிப்பை சில ஆண்டுகளில் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என அஜீத் சொன்னாராம் விஜய்யிடம்.

அதனைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய், அவர் பீல்டில் இருக்கும் வரை கஷ்டப்படுத்தாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் இதில் கடும் கோபமடைந்த குகநாதன், அவரை யார் நடிக்கச் சொன்னது.. விருப்பமில்லாவிட்டால் போகட்டும் என்ற ரேஞ்சுக்குப் பேசிவிட்டதாக கோலிவுட்டில் பரபரக்கிறார்கள்.

ரொம்பத்தான் கோபமாக இருக்கிறார்கள் போல..!

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

விஜய்யை இயக்குகிறேன் : ஜெயம் ராஜா

விஜய்யின் 50வது படமான சுறா வேகமாக தயாராகி வருகிறது. ரா‌ஜ்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். மணிசர்மா இசையமைக்க தமன்னா விஜய்யின் ஜோடி. ஏகாம்பரம் கேமரா.
சுறாவுக்குப் பிறகு விஜய் யார் படத்தில் நடிப்பார்? இந்தக் கேள்விக்குப் பதிலாக மூன்று பெயர்களை முன் வைத்தனர். ஒருவர் ஜெயம் ராஜா. இவர் விஜய்யிடம் கதை சொல்லி ஏற்கனவே ஒப்புதல் வாங்கியிருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் ஜெயம் ராஜா இயக்கும் படத்தை தயா‌ரிப்பதாக ஒப்பந்தம்.


இன்னொருவர் மலையாள இயக்குனர் சித்திக். தனது பாடிகார்ட் படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லி இவரும் ஏற்கனவே ஒப்புதல் வாங்கியிருந்தார்.


மூன்றாவது லிங்குசாமி. விஜய்க்கு கதை தயார் செய்து வைத்திருப்பதாக ஓபனாகவே அறிவித்திருந்தார்.


இந்த மூவ‌ரில் முந்திக் கொண்டவர் சித்திக் என்கிறார்கள். மலையாளத்தில் பாடிகார்ட் நன்றாகப் போவதால் உடனே அதை ‌‌ரீமேக் செய்ய விரும்புகிறாராம் விஜய். லிங்குசாமிக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அவரும் சிம்புவை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். ஜெயம் ராஜா?


‘ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை நான் இயக்குகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. சுறாவுக்குப் பிறகு நான் இயக்குகிறேனா இல்லை அதற்கு அடுத்து இயக்குகிறேனா என்பதெல்லாம் தெ‌ரியாது’ என கூறியிருக்கிறார் ஜெயம் ராஜா.


ஆக, விஜய்யை ஜெயம் ராஜா இயக்குகிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

2009 Tamil Super Star Awards

tamilsuperstarvijay.blogspot.com   வழங்கும் TamilSuperStar Awards 2009

சிறந்த நடிகர் -
சிறந்த நடிகை -
சிறந்த தமிழ்த்திரைப்படம் -
சிறந்த இசையமைப்பாளர் -
சிறந்த இயக்குனர் -
சிறந்த பாடகர் -
சிறந்த பாடகி -
சிறந்த பாடல் -
சிறந்த நகைசுவை நடிகர் -
சிறந்த பாடலாசிரியர் -
மற்றும் சிறப்பு விருதுகள் !

உங்கள் தெரிவுகளை இவ் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்  
tamilsuperstarvijayfans@gmail.com

புதன், 17 பிப்ரவரி, 2010

இந்தி '3 இடியட்ஸ்' படம் ரீமேக் : அமீர்கான் வேடத்தில் விஜய்

'3 இடியட்ஸ்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. ரீமேக் உரிமையை ஜெமினி பிலிம்சர்க்கியூட் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.
இப்படத்தில் நடிக்க முன்னணி தமிழ் ஹீரோக்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். பாலாவின் “அவன் இவன்” படத்தில் விஷால், ஆர்யா என இரு கதாநாயகர்கள் சேர்ந்து நடிக்கின்றனர்.
அதுபோல் '3 இடியட்ஸ்' ரீமேக்கிலும் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க பலர் விரும்புகிறார்கள்.
அமீர்கான் வேடத்தில் விஜய் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற இரு ஹீரோக்கள் மற்றும் கதாநாயகி பரிசீலனையில் உள்ளனர். விஷ்ணுவர்த்தன் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

விளம்பரத்தில் விஜய்

பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற தலைப்பில், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகமே ஒரு பெரும் பாராட்டு விழா எடுத்தது. அந்த விழாவில்தான் 'எங்களை மிரட்டி பாராட்டு விழாவுக்கு வர வைக்கிறார்கள்' என்று குரல் கொடுத்தார் அஜீத்.

அதன் பிறகு ஆளாளுக்கு பதில் குரல் கொடுக்க, எப்படியோ நடக்கவிருந்த பாராட்டு விழா, ஒரு மாதிரி நடந்து முடிந்தது.

இப்போது அந்த பாராட்டு விழாவை, கலைஞர் டி.வி. விரைவில் ஒளிபரப்புகிறது.

இதற்கான கிளிப்பிங்ஸ் மற்றும் புரமோஷனல் விளம்பரங்கள் தற்போது கலைஞர் குழும சேனல்களில் உலா வருகின்றன.

இதில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா மற்றும் நடிகைகளின் பெயர்களைக் கூட குறிப்பிடும் அறிவிப்பாளர், அந்த நட்சத்திர பட்டியலில் அஜீத் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி ஷாலினி சகிதம் பங்கேற்ற அவரது படமும் கூட தவிர்க்கப்படுகிறது. விழாவின் ஹைலைட்டே அஜீத்தின் பேச்சுதான். அதையும் கவனத்துடன் தவிர்த்து விட்டுள்ளனர்.

இப்படியொரு நிகழ்ச்சியில் அஜீத் வந்து போனார் என்றாவது காட்டுவார்களா!




புதன், 10 பிப்ரவரி, 2010

மலையாள பாடிகார்டு படத்தை ரீமேக்கும் விஜய்... ஜோடி அசின்!

சுறா படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 51 வது படத்துக்காக, மலையாளத்தில் சமீபத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் உரிமையை வாங்கியுள்ளார் விஜய்.

சுறா படம் கிட்டத்தட்ட முடிவுறும் கட்டத்துக்கு வந்துவிட்டது. எனவே தனது 51வது படம் குறித்த வேலைகளில் மும்முரமாக உள்ளார் விஜய்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளராக சிவராஜ் வெங்கடராஜூ என்பவர் தயாரிக்கிறார். இவர் வேறு யாருமல்ல, விஜய் நடிப்பில் 2000-ம் ஆண்டு வெளியான ப்ரியமானவளே படத்தைத் தயாரித்தவர். இந்தப் படத்துக்குப் பிறகு வேறு படமே தயாரிக்கவில்லை அவர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு விஜய் படம் மூலம் மறுபிரவேசமாகிறார்.

பாடிகார்டு ஒரிஜினல் படத்தை இயக்கிய சித்திக் இந்தப் படத்தையும் இயக்குகிறார். தமிழில் விஜய்யின் இமேஜுக்கு ஏற்ப அந்தப் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதி வருகிறாராம் சித்திக்.

பெரிய மனிதர்களுக்கு பாடிகார்டாகப் போவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் காமெடி கலந்த சமாச்சாரங்கள்தான் இந்தப் படம். நயன்தாரா - திலீப் நடித்து மலையாளத்தில் சராசரிப் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சித்திக் ஏற்கெனவே விஜய்யை வைத்து பிரண்ட்ஸ் படம் எடுத்தவர்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் அசின்.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

அஜீத்-விஜய் இணைந்து டான்ஸ்!

அஜீத்தும் விஜய்யும் சேர்ந்து பேசினாலே சிலிர்த்து போகிறது நாடு. சேர்ந்து ஆடினால்? அட... இது எப்போ? மேட்டரில் மேலும் கொஞ்சம் சர்க்கரையை போட்டுக் கொள்ளுங்கள் நண்பர்களே.
இந்த இரண்டு பேருடன் சேர்ந்து விக்ரமும் ஆடப் போகிறாராம்!
 
இம்மாதம் ஆறாம் தேதி முதல்வர் கலைஞருக்கு நடக்கவிருக்கும் பாராட்டு விழாவில்தான் இந்த ஆட்டத்தை போட போகிறார்கள் மூவரும். பொதுவாக எந்த விழாவாக இருந்தாலும் சைலண்ட்டாக ஓட்டமெடுப்பதுதான் அஜீத்தின் வழக்கம். அப்படி வந்தாலும் எவ்வித ஆர்ப்பாட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் அமைதியாக ரசித்துவிட்டு கிளம்பிவிடுவார். ஆனால் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு முதல்வர் நிலம் கொடுக்கிறார் என்றதும் தாமே முன் வந்து ஸ்டேஜ் பர்பாமென்சுக்கு விருப்பம் தெரிவித்தாராம்.

முதல்வர் கலைஞர் எழுதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் அந்த பாடலுக்குதான் இந்த மூவரும் மேடையேற போகிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாடலில் அஜீத்-விஜய் சேர்ந்து ஆடுகிறார்கள் என்பதும் கூடுதல் அட்ராக்ஷன்தானே?

புதன், 3 பிப்ரவரி, 2010

சுறாவில் சுனாமி

மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை படத்தின் தழுவல் சுறா என்று சொல்லப்பட்டாலும், அதற்கு முற்றிலும் மாறுபட்ட காட்சிகளுடன் உருவாகி வருகிறது விஜய்யின் 50வது படம். முக்கியமாக விஜய் சம்பந்தப்பட்ட அறிமுக காட்சி.

இதுவரை தரைக்கு அடியிலிருந்து பாய்ந்து வருவது, வானத்திலிருந்து குதிப்பது என்று விதவிதமாக விஜய்யின் அறிமுக காட்சியை அமைத்திருக்கிறார்கள். கடல் மட்டும்தான் பாக்கி. சுறாவில் அதையும் விடவில்லை. சுனாமி அலைகளுக்கு நடுவே விஜய் படகு ஓட்டி வருவதுபோல் அறிமுக காட்சியை அமைத்திருக்கிறார்களாம்.

சுனாமியில் வீடு இழந்தவர்களுக்கு விஜய் உதவுவதுதான் படத்தின் மையப் பகுதி என்றும் கூறப்படுகிறது. 

Best Actress in 2009

Best Actor in 2009

best songs in 2009

Who is your favorite Dancer in Tamil cinema History?

Who is your favorite actor?

How is this Website?

What is your favorite Movie

Vote for your favorite Movie in 2008

Best Music Director in 2009

Poll

Vijay's Best OnScreen Pair
Thrisha
Asin
Shriya
Nayanthara
Genelia
  
pollcode.com free polls

Poll

vote for your favorite song
Puli urumuthu-Vettaikaran
Unal unal-ATM
Moza Molanu-Kuruvi
Dole Dole-Pokkiri
Va va en thalaiva-Sachien
  
pollcode.com free polls