எந்திரன் ஷூட்டிங் முடிவடைந்து, படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்ட நிலையில், சங்கர் அடுத்த புரோஜெக்டுக்கு தயாராகிவிட்டார். ஹிந்தியில் அமீர் கான், மாதவன் நடித்து வெளியான 3 இடியட்ஸின் தமிழ் ரீமேக்கை அவர் தான், இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அப்படி மூவரும் இணைந்தால், தமிழ்த்திரையுலகத்தின் புதிய ட்ரெண்டை அறிமுகப்படுத்திய பெருமையில் அவர்களும் இணைவார்கள்! ஏனெனில் ஏற்கனவே பாலவின் அவன் இவன் படத்திற்காக ஆர்யா விஷால் சேர்ந்து நடிக்க, யுவன் சங்கர்ராஜாவின் இசையில் 'வானம்' படத்திற்காக சிம்புவுடன் இணைகிறார் பரத்! தெலுங்கில் வெளிவந்த 'வேடம்' படத்தில் மனோஜ் எனும் கதாபாத்திரத்தில் நடித்த பரத்தை,ரீமேக்கான இந்த படத்திலும் நடிக்க சொல்லி கேட்டார்களாம்! தலையசைத்திருக்கிறார் பரத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக