50-வது படமான "சுறா'வின் ரிலீசுக்குப் பின் "பாடிக் கார்ட்"டின் தமிழ் பதிப்பான "காவல்காரன்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். சித்திக் இயக்கத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக அசின் நடிக்கிறார். இந்தப் படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். இந்தப் படத்துக்கு "வேலாயுதம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது விஜய்யின் 52-வது படமாக உருவாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக