Best Of IlayaThalapathy Vijay-Part 1
சனி, 28 நவம்பர், 2009
சண்டைக்காரரை மாற்றிய விஜய்
விஜய் படத்தில் மாறாத விஷயங்கள் என்று சில உண்டு. அதில் முக்கியமானது சண்டைப் பயிற்சியாளர் பெப்சி விஜயன். விஜய்யின் பெரும்பாலான படங்களுக்கு பெப்சி விஜயன்தான் சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறார். ஆனால், வேட்டைக்காரனிலிருந்து இந்த காம்பினேஷன் மாறுகிறது. விஜயனின் இடத்தை கனல் கண்ணன் பிடித்திருக்கிறார்.வேட்டைக்காரனில் கனல் கண்ணன் அமைத்த சண்டைக் காட்சிகள் திருப்திகரமாக இருந்ததால் சுறா படத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் விஜய், வில்லன் தேவ் கில்லுடன் மோதும் காட்சியை கனல் கண்ணன் அமைத்திருந்தார். தொடர்ந்து இனி விஜய் படங்களுக்கு கனல் கண்ணனே ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிவார் என்கிறார்கள்.ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பரில் மீண்டும் கேரளாவுக்கு செல்கிறது சுறா யூனிட்.
விஜய் பிறந்தநாளில் சுறா
சுறா விஜய்யின் ஐம்பதாவது படம். சகல விதத்திலும் படம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஹைதராபாத்தில் நடக்கும்; படப்பிடிப்பைத் தொடர்ந்து டிசம்பரில் கேரளா செல்கிறது மொத்த யூனிட்டும்.எஸ்.பி.ராஜகுமார் படத்தை இயக்குகிறார். ஆக்சன் காட்சிகளுக்கு சமமாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக விஜய், வடிவேலு வரும் காட்சிகள் வயிற்றை பதம்பார்க்கும்.2010 தொடக்கத்திலேயே படம் தயாரானாலும் ஜுன் 22 ஆம் தேதி படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன். அன்றுதான் விஜய்யின் பிறந்தநாள். விஜய் படம் வெளியாக அதைவிட சிறந்த நாள் இருக்க முடியாது.
விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!
தம்பி படத்தை அடுத்து ’கோபம்’ காட்டவிருந்தார் சீமான். ஆனால், சூழ்நிலை அவரை ‘வாழ்த்துகள்’சொல்ல வைத்தது.
இந்த காலகட்டத்தில் சீமான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, ‘’கோபம்’ என்று படம் எடுக்கப்போகிறேன்’ என்று சீமான் சொல்ல,பிரபாகரனுடன் பக்கத்தில் இருந்தவர் ‘சினம்’ என்று தலைப்பு வையுங்கள் என்றாராம். அதற்கு பிரபாகரன், ‘கோபம் என்று சொன்னால்தான் அதில் அழுத்தம் இருக்கிறது. ஒரு வேகம் இருக்கிறது. அந்த தலைப்பிலேயே படம் எடுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள். ஆனால் வாழ்த்துக்கள் மாதிரி மென்மையான படம் எடுக்க வேண்டாம்’என்று சொன்னாராம். அதன்படி சீமான் ‘கோபம்’காட்ட முடிவெடுத்துவிட்டார். நடிகர் விஜய்யும் சீமானுடம் இணைய முடிவெடுத்துவிட்டார். படப்பிடிப்புதான் எப்போது துவங்கப்போகிறது என்று தெரியவில்லை.

ஞாயிறு, 15 நவம்பர், 2009
விஜய், தமன்னா ஆட்டம்
ஹைதராபாத்தில் சுறா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லன், தேவ் கில். மஹாதீரா படத்தில் வில்லனாக நடித்தவர்.
தெலுங்குப் படத்தில் பிஸியாக இருப்பவர் ஷூட்டிங் ஹைதராபாத்தில் என்பதால் கவலையில்லாமல் கலந்து கொள்வார் என்கிறார்கள். ஹைதராபாத் கிளம்பும்முன் சுறாவின் முக்கிய காட்சிகளை ஏவிஎம் ஸ்டுடியோவில் படமாக்கினர். வேறொன்றுமில்லை, விஜய், தமன்னா ஆடிப்பாடிய பாடல் காட்சிதான் அது.. விஜய் முருகன் உருவாக்கிய காஸ்ட்லி அரங்கில் இந்த ஆட்டம் பாட்டம் படமாக்கப்பட்டது. விஜய் தமன்னாவுடன் ஆடிப் பாடியது இதுதான் முதல்முறை.

வெள்ளி, 6 நவம்பர், 2009
வேட்டைக்காரன் டிசம்பர் எதிர்பாக்கலாம்!

விஜயின் புதிய பாடமான வேட்டைக்காரன் டிசம்பர் பதினெட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.அனுஷ்கா ஷெட்டி விஜயுடன் முதல் முதலாக ஜோடி சேரும் படம் இது.
விஜயின் ரசிகர்களுக்கு இடையே பலத்த எதிர்பார்ப்பை எட்படிதிருக்கும் இப் படமானது டிசம்பர் அதிரடியாக வரப்போகிறது.இது விஜயின் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படித்தியுள்ளது.வேட்டைக்காரன் ற்றைலேரை வெகு விரைவில் சன் வெளியிட உள்ளது.
வியாழன், 5 நவம்பர், 2009
சட்ட ரிதியாக சந்திப்பேன் - விஜய்

வீட்டு வசதி வாரியத்திடமிருந்து விஜய் வாங்கிய நிலம் தொடர்பாக விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபற்றி விஜய் சார்பாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார். உதயம் திரையரங்குக்கு எதிரே உள்ள நிலத்தை வீட்டு வசதி வாரியம் ஏலம் விட்டது. அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கி விஜய் ஜோசப் என்ற எனது சொந்த பெயரில் பதிவு செய்தேன். ஆனால், அதற்கு அருகில் இருக்கும் திருமண மண்டபத்தையும் நான் வாங்கிவிட்டதாக சிலர் புரளி கிளப்புகிறார்கள்.
நான் வாங்கிய இடத்தில் பறக்கும் ரயில் திட்டம் வர இருப்பதால் அதற்குப் பதிலாக வேறு இடத்தை வீட்டு வசதி வாரியம் அளித்தது. அதில்தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.
இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.
விஜய்க்கு தேசிய அளவில் புகழ் அதிகரித்து வருகிறது. அதை பொறுக்க முடியாத சிலர் கிளப்பிவிடும் வீண் வதந்திகள் இவை என்று தெரிவித்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
புதன், 4 நவம்பர், 2009
ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு விஜய்யின் அடுத்த படம்... இயக்குநர் ராஜா!

தனது சினிமா வாழ்க்கைக்கே புதிய திருப்பத்தைத் தந்த காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அடுத்த படத்தில் நடிக்கிறார் விஜய். (இந்தப் படத்தை சங்கிலிமுருகன் தயாரிக்க ஆரம்பிக்க, பின்னர் அதை அவரிடமிருந்து வாங்கி ஆஸ்கர் தான் தயாரித்தார்)
இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் அடுத்தடுத்து தொடர் வெற்றிகளைத் தந்த ஜெயம் ராஜா.
தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து தொடர்ந்து 5 படங்கள் இயக்கிய ராஜா, வெளி ஹீரோ ஒருவரை வைத்து படம் இயக்குவது இதுவே முதல் முறை.
காதலுக்கு மரியாதை படம் தந்த கமர்ஷியல் வெற்றியை இந்தப் படமும் நிச்சயம் தரும் என்பதற்கு இந்த கூட்டணியே சான்று என்கிறார் இயக்குநர் ராஜா.
விஜய்யின் 51வது படம் இது. 2011 தீபாவளி வெளியீடாக இந்தப் படம் வெளியாகும் என ஆஸ்கர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில்...
செவ்வாய், 3 நவம்பர், 2009
ஹைதராபாத்தில் சுறா

மரக்காணம் உப்பு ஏரிக்கு அருகில் இரண்டாவது ஷெட்யூலை முடித்த சுறா யூனிட் அடுத்து ஹைதராபாத் செல்கிறது.
விஜய்யின் 50வது படமான சுறாவை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கி வருகிறார். தமன்னா ஹீரோயின். கேரளாவில் தொடங்கிய படப்பிடிப்பு பிறகு மரக்காணத்தில் தொடர்ந்தது. அங்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதையடுத்து வரும் 5ஆம் தேதி சுறா யூனிட் ஹைதராபாத் செல்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படும் என தெரிகிறது.